🌻 அழகி 39

200 11 0
                                    

வதனியுடன் பேங்கில் பணிபுரியும் அச்சுதன் ஜெயனுடைய வீட்டிற்கு வந்து அன்று மதிய விருந்துக்கு ஜெயன், வதனி,  முகில் மூவரையும் அவன் குடும்பத்தினர் தங்கியிருந்த ரிஸாட்டுக்கு வற்புறுத்தி அழைத்திருந்தான்.

கிட்டத்தட்ட ஒருவருடமாக நினைத்து நினைத்து தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த ஒரு பெரிய டாஸ்க் ஜெயனுடைய உதவியால் சுலபமாக முடிந்திருக்க அந்த சந்தோஷத்தில் தான் அவனையும் வதனியையும் தேடி அவர்களுடைய வீட்டிற்கே வந்திருந்தான் அச்சுதன்.

அவன், அவனுடைய அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள், தங்கை, தங்கை கணவன், அவர்களுடைய இரண்டு பிள்ளைகள், சித்தப்பா, சித்தி, தம்பி, தங்கை அவர்களுடைய கணவன், மனைவி என ஒரு டஜனுக்கும் மேல் ஆட்கள் இருந்த குடும்பத்தில் அனைவருக்கும் ஊட்டி, குன்னூர், ஆனைமலை, டாப்ஸ்லிப், கோயமுத்தூர் பகுதிகளையெல்லாம் ஒரு ரவுண்டு அடித்து காட்டி அவர்களுடைய வெகேஷனை மிகவும் திருப்திகரமாக முடித்து வைத்திருந்தான் ஜனமேஜயன்.

"ஜனா.... வீ லவ் யூ! கொஞ்சங்கூட மொகஞ்சுழிக்காம நீங்க எங்க எல்லார்க்கும் செஞ்சது வல்லிய சகாயமாக்கும்! கன்னனூர் டிஸ்ட்ரிக்ட்டுக்கு வரச்சே நம்ம ஆத்துக்கு கண்டிப்பா ஒருதடவ வந்துட்டுப் போவணும். சரியா?" என்று சொன்ன அச்சுதனின் அப்பாவிடம் புன்னகைத்து அவர் பேசிய அனைத்திற்கும் பெரிதாக தலையை ஆட்டி வைத்தான்.

"தேங்க்ஸ் மிஸ்டர் ஜனா.... வதனி மேடம் வொர்க்ஸ்பாட்ல எங்க யார்கூடயும் ரொம்ப ப்ரெண்ட்லியா மூவ் பண்ணதில்ல; பட் உங்களுக்கு இந்த ஊர்ல நன்னா பழகுனவா யாரேனும் தெரியாமான்னு ஒருவார்த்த கேட்டதுக்கு அவங்க இவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணுவாங்கன்னு நான் நெஜமா நெனைக்கல. என் ஹோல் பேமிலியும் இந்த ட்ரிப்ப ரொம்ப என்ஜாய் பண்ணியிருக்கா. நீங்களும் மேடமும் அம்மாவும் கண்டிப்பா இன்னிக்கு லன்ஞ்சுக்கு எங்க கூட ஜாய்ன் பண்ணனும். ப்ளீஸ்!" என்று சொன்னவனிடம் வதனியும், ஜெயனும் கண்டிப்பாக வருகிறோம் என்று சொல்லி வைத்தாலும் ஜெயனுக்கு அவளது முகம் போன போக்கைப் பார்த்து சிரிப்பு தாங்க முடியவில்லை.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now