🌻 அழகி 70

256 10 6
                                    

"வதனிக்கண்ணு; நாளையில இருந்து அந்தக் கிறுக்குப்பயல நா ஒங்கையில புடிச்சுக் குடுத்துருவேன் தங்கம்.... அப்புறம்
அவேன்பாடு.... ஒம்பாடு! எப்பாடா....
இந்தப்பயலுக்குனு பொறந்தவ எங்கடா இருக்கா, எப்படா நம்ம கண்ணுல அம்புடப் போறான்னு நா நெனைக்காத நாளில்ல கண்ணு!" 

"ஒருவழியா அவே மனசப் புரிஞ்சுக்குற மாதிரி ஒரு மகராசி நீ கெடச்சு ஒங்க ரெண்டு பேருக்கும் நாளைக்கு ஒரு நல்லதும் நடக்கப்போவுது.... இப்ப தான்டா கண்ணு முகில்ம்மாவுக்கு ரொம்ப சந்தோசமாயிருக்கு!"

"இப்டி சந்தோசத்துல திக்கு முக்காடிப் போயிருந்தா நான் பெத்தது அதுக்கும் ஒரு புள்ளிய வச்சு நிப்பாட்டுங்குது.....
நாளைக்கு ஒனக்கு கல்யாணமுடா; அதுனால இன்னிக்கு பத்து பேத்த கூப்ட்டு நிச்சயம் பண்ணனும்; வதனிப்புள்ளக்கு நலுங்கு வைக்கணும்னு சொன்னா கேக்குறானா....?"

"எதச் செய்றதா இருந்தாலும் அத நீயே செய்யிம்மா; நாளைக்கு காலையில கல்யாணத்தன்னிக்கு வார தெரிஞ்சவங்க, சொந்தக்காரவுங்களுக்கு ரெண்டு வேளைக்கு மட்டும் நல்ல சாப்பாடு போட்டா போதும்; தேவையில்லாம இன்னிக்கு வேற எதுக்கு சும்மா ஆளத் தெரட்டிக்கிட்டுங்குறான்! உசுர வாங்குறதுக்குன்னே வந்து பொறந்தபய!" என்று மகனை திட்டிய முகிலமுதத்திடம் அசட்டையான குரலில்,

"ஆமா.... நாந்தான் உங்கிட்ட அதெல்லாம் சொன்னேன்; இப்டித்தான் ஒஉசுர வாங்குவேன்!
அதுக்கென்னங்குற இப்ப....?"

"நீயுந்தான் சும்மாயில்லாம இவ மொகத்துல ஒரு சந்தனத்த பூசி பொட்டு வைக்குறதுக்காண்டி பத்து பேர கூப்டுவேன், அம்பது பேர கூப்டுவேன்னு சொல்லி அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்க......!" 

"வைக்குற பொட்ட நீயே வையி;  எங்களுக்கு வச்சது போக சந்தனம் மிச்சமிருந்தா அப்டியே கோமதிக்கும், எளங்கோவுக்கும் ரெண்டு பொட்ட வச்சு உட்டுட்டு வா!" என்று சொன்ன படியே தன்னுடைய சட்டையை பேண்ட்டுக்குள் இன் பண்ணிக் கொண்டு வந்து வதனியின் அருகில் உட்கார்ந்தான் ஜெயன்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Όπου ζουν οι ιστορίες. Ανακάλυψε τώρα