🌻 அழகி 80

232 12 2
                                    

"ம்ஹூம்... ஒம்பொண்டாட்டி மந்துரம் போட்டா சட்டியில வந்து குதிச்சுச்சு பிரியாணி? வர்த்தினியே அத ரெண்டுதடவ சாப்புட்டுச்சு! நான் நாலஞ்சு தடவ எடுத்து வச்சு சாப்புட்டுருப்பேன்னு நெனக்குறேன். எவ்ள சாப்டேன்னு கணக்கே பாக்கல! அம்புட்டு பேரும் அள்ளி அள்ளி சாப்புடுற மாதிரி செஞ்ச சாப்பாட்டுக்கு எத்தன கிலோ கறி, அரிசி, எண்ண, மளிக சாமானெல்லாம் வாங்குனியோ தெரியல..... அதுக்கு இந்த காச வச்சுக்க!"

"அதுக்கும் மேல இதுக்குள்ள காசு மிச்சமா இருந்துச்சுன்னா நிஷா, ஹசன், பைசல் மூணு பேருக்கும் ஏதாச்சு சாமான் வாங்கிக் குடு..... அவசர அவசரமா எல்லாத்தையும் செஞ்சு கடைசில அதுக மூணுக்கும் தான்டா எங்கல்யாணத்துக்குன்னு ஒண்ணுமே வாங்கிக் குடுக்கல!" என்று சொல்லி நஸாரிடம் லேசாக வருந்தினான் ஜெயன்.

"டேய் மாப்புள.... சாப்பாடு போட்டதுக்கு எல்லாம் போய் இப்டி கணக்கு பாத்துட்டு இருக்க? அது ஒம்மேல இருக்குற அக்கறயால செஞ்சதுடா! எவனோ ஒரு பொரம்போக்கு எதையோ சொன்னாங்குறதுக்காக நீ இப்டியெல்லாம் செய்யாதடா ஜெயனு!" என்று ஆதங்கம் தாண்டி கோபத்திற்கு போனவனிடம்,

"உடுறா நஸாரு! கல்யாணத்துக்குன்னு ஒங்கிட்ட ஒத்த பைசா காசு வாங்கக் கூடாதுன்னு நா ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன். நீயா குடுத்தாலும் சரி; நம்ம ட்ராவல்ஸ் பேருல குடுத்தாலும் சரி; அந்த காச என்னால வாங்கிக்க முடியாது. இது நமக்குள்ள இருக்கட்டும். இதையும் போய் அவ கிட்ட போயி ஒளறி வைக்காத!" என்று சொன்ன நண்பனை கட்டியணைத்துக் கொண்டான்.

"இது எதுக்குடா?" என்று திகைத்தவனிடம்,

"பேப்பயலே! கல்யாணம் கட்டுனதுக்கு நா ஒன்னிய வாழ்த்தணும்ல அதுக்குத்தா;
நீயும் வதனிப்புள்ளயும் ஓஹோன்னு வாழணும்டா! நீ சீக்கிரத்துல மொதலாளி ஆகணும்!" என்று தன் மனதார நண்பனுக்கு வாழ்த்து சொன்னான் நஸார்.

"மொதலாளியா தான? நாளைக்கே ஆகிருவம்! நீ கெளம்பு....
அங்க ஒம்பீவி எங்கடா நஸார இன்னுங்காணும்னு தேடிக்கிட்டு இருக்கப் போறா!" என்று சொல்லி விட்டு நஸாருடன் கீழிறங்கி வந்து அவனை வழியனுப்பி வைத்தான் ஜெயன்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now