🌻 அழகி 81

207 10 1
                                    

"என்னடா கண்ணு..... காலையில எல்லாம் நல்லாத்தான இருந்த? கல்யாணம் முடிஞ்சதுல இருந்து ஒருமாதிரியா இருக்கியே என்ன?" என்று படுக்கையில் அமர்ந்திருந்த தன்னுடைய மருமகளிடம் கேட்டார் முகில்.

வதனியின் உற்சாகம், சந்தோஷம்,சோகம், வருத்தம் இவைகள் எல்லாம் எவ்வளவு டெஸிபலில் இருக்கிறது என்று அவள் கண்ணசைவிலேயே கண்டுபிடித்து விடுவார்.

"கல்யாணம் நடந்தத அப்பாட்ட சொல்லணும் போல இருக்கு முகில்ம்மா!" என்று சொல்லி விட்டு முகிலின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் வதனி.

"அட..... என் தங்கமே? இதுக்குத்தானா மருகிட்டு ஒக்காந்துருக்க? அப்பாட்ட தான பேசணும்? அதுக்கென்ன?
போனப் போட்டு பேசுடா அவருட்ட!" என்று சொன்னார் முகில்.

"வேண்டாம் முகில்ம்மா; இது தெரிஞ்சா ஜெயன் என்ன சொல்லுவாரோ தெரியல..... அவருக்கு ரொம்ப கோபம் வரும்!" என்று தலையாட்டி மறுத்தவளிடம்,

"இதென்ன புதுசா ஒம்புருஷன அவரு இவருங்குற..... இது நல்லாவேயில்ல! இப்டி கூப்டச் சொல்லி அவங்கேட்டானா உங்கிட்ட? அவங்கெடக்குறான் ஒரு ஓரத்துல..... நீ ஒங்கப்பாவ கூப்டு முதல்ல!" என்று சொன்னார் முகில்.

"இல்ல முகில்ம்மா.... ஹஸ்பெண்ட்  ஆகிட்டாரு! இனிமே அவர எல்லார் கிட்டயும் மரியாதயா பேசணும்ல? எங்களுக்குள்ள பேசிக்குறது வேற... உங்க எல்லார்ட்டயும் சொல்றது வேற இல்லையா?" என்று தயங்கியவளிடம்,

"உங்க ரெண்டு பேரோட விஷயத்துல ஒங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சன வராத வரைக்கும் நான் தலையிடவே மாட்டேன். அதுனால என்னையப் பத்தியெல்லாம் ஒண்ணும் யோசிக்காத! அவன பேரு சொல்லிக் கூப்டுறதுன்னா கூப்ட்டுக்க! இப்ப ஒங்கப்பாவ கூப்ட்டு பேசு!" என்றார்.

இப்படி எட்டு யோசனைகளுடன் தன்னுடைய தந்தையின் எண்ணுக்கு அழைத்தாள் வதனி. அவள் அழைத்தது என்னவோ தந்தைக்கு தான்.... ஆனால் அவள் செய்த அந்த அழைப்பை எடுத்தது அவளுடைய சகோதரன்.

"ஹலோ.....!" என்ற அவனது குரலைக் கேட்டதும், "அருண் நா வர்த்தினி பேசுறேன். அப்பா இருக்காங்களா? அவங்க கிட்ட ஃபோன குடேன். ஒரு ட்டூ மினிட்ஸ் நான் அப்பா கிட்ட பேசணும் அருண்..... ப்ளீஸ்!" என்றாள்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now