🌻 அழகி 74

250 12 3
                                    

நேற்று நடந்த ஜெயன் வதனியின் திடீர் நிச்சயதார்த்த விழாவைப் போல் இன்று அவர்களுடைய திருமணமும் குன்னூரில் இருந்த ஒரு சமுதாய நலக்கூடத்தில் சிறப்பாக நடைபெற இருந்தது.

நஸார் கொடுத்த விருந்தை முடித்து இரவு பதினொன்றரை மணி அளவில் வீட்டிற்கு வந்தவன்,
தன் தாயிடம் "அமுதாம்மா.... நான் வர்த்தினி கிட்ட கொஞ்சம் பேசணும்!" என்று சொல்லி விட்டு அவளுடன் படிகளில் ஏறி விட்டான்.

"ம்ப்ச்! எனக்கு தூக்கம் வருது ஜெயன்!" என்று சிணுங்கியவளிடம், 

"ஏய்.... ஹெட்லைட்டு; இன்னிக்கு ஷெட்ல நடந்தது எல்லாத்தையும் ஒங்கிட்ட ஒண்ணு விடாம சொன்னதுக்கு பெறவு தான் ஒன்னைய நான் தூங்க உடுவேன்! ஒழுங்கா ஒக்காந்து கத கேளு!" என்று சொல்லி விட்டு நடந்தது அனைத்தையும் அவளிடம் சொல்லி விட்டு நான்கு தடவைகள் அவளை கீழே இறங்கி வருகிறாயா என்று கேட்டு விட்டு அவள் "ப்ளீஸ் ஜெயன் கொஞ்ச நேரமாவது நிம்மதியா தூங்க விடு!" என்று அவனிடம் கெஞ்சிக் கேட்ட பிறகு தான் அரைமனதுடன் கீழே இறங்கிச் சென்றான்.

"ஆளு தான் இவ்ளோ பெரிசா வளந்து வச்சுருக்கான்.... யாராச்சு இவன ஏதாச்சு சொல்லிட்டா இன்னும் சின்னக்கொழந்த மாதிரி  கோவிச்சுக்கிட்டு ஒரு ஓரமாப் போயி தனியா ஒக்காந்துக்குறான்.... ஆனாலும் உன்னோட இந்த பிஹேவியர் ரொம்ப நல்லாயிருக்குடா கடங்காரா!" என்று முணுமுணுத்த படி உதட்டில் சிரிப்புடன் படுக்கையில் சாய்ந்தாள் வர்த்தினி.

இரவு முழுவதும் படுக்கையில் புரண்டு புரண்டு பார்த்து விட்டு காலை ஐந்து மணிக்கு எழுந்து ஐந்தரை மணியளவில் வெளியே கிளம்ப தயாராகி வந்தான் ஜெயன்.

"நம்ம வேலைய நம்ம தான் முன்னால போயி அங்க இருந்து பாத்துக்கணும்! அமுதாம்மா நீயும் வர்த்தினியும்  கெளம்பி அப்புறமா நஸாரு கூட காருல வாங்க! நான்  அங்க போயிட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு எல்லாம் சரியா இருக்குதான்னு பாக்குறேன்!"

"என்னோட கல்யாண சட்ட, பேண்ட்டு ரெண்டையும் பையில வச்சு அங்க எடுத்துட்டுப் போறேன்; அப்பாவ கும்புட்டுட்டேன்;
எம்பொண்டாட்டி முழிச்சு கீழ எறங்கி வரும் போது அவ கிட்ட நான் அங்க கிளம்பிட்டதா சொல்லிடு!" என்று சொன்னவன் தன்னுடைய அன்னையின் கிண்டலான தலையாட்டுதலில் கடுப்படைந்து,

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now