🌻 அழகி 44

183 12 2
                                    

"என்ன தான் ஆச்சு உனக்கு? ஒன்னைய எதுக்கு பாவம்னு நெனைக்கணும்? கைய எடு முதல்ல..... தோச சாப்புடுறியா? வேண்டாமா?" என்று கேட்டு அடுப்பின் புறமாக திரும்பப் போனவளை திரும்ப விடாமல்  நின்றிருந்த படியே அப்படியே நின்று கொண்டிருந்தான் ஜெயன்.

"ஏன்டீ இப்டி எல்லார் கண்ணுக்கும் தனியான ஒரு அழகியா தெரியுற? அச்சுதன் ஸாரோட சித்தப்பன் எங்கிட்ட வந்து உன்னையப் பத்தி விசாரிக்குறான்; அவனோட பையனுக்கு ஒன்னைய ரெண்டாந்தாரமா ஒன்னோட வீட்ல பேசி கட்டித்தருவாங்களான்னு நான் கேட்டுச் சொல்லணுமாம் அவனுக்கு..... நாம ரெண்டு பேருந்தான் ரொம்ப ப்ரெண்ட்ஸா இருக்கோமாம்; நம்மள பாத்தா ப்ரெண்ட்ஸ் மாதிரியில்ல தெரிஞ்சிருக்கு அவனுக்கு......
பொரம்போக்கு நாதாரி!"

"ஊரு சுத்திப் பாக்க வந்தமா, ஊரப் பாத்துப் போனமான்னு இல்லாம..... என்னோட ஏஎம் அம்மாவ, அதுவும் ரெண்டாந்தாரமா எப்டிடீ பொண்ணு கேக்கலாம்? அவனுக்கெல்லாம் என்ன கொழுப்பு இருக்கணும்?" என்று கோபம் அடங்காத குரலில் கத்தியவனிடம்,

"ஷ்ஷ்ஷ்! கத்தாத; அமைதியா இரு ஜெயன்!" என்று சொல்லி அமைதிப்படுத்தினாள் வதனி.

"ம்ஹூம்; நீ சொல்லு.... என்னைய தவிர வேற எவனையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லு; அப்பத்தான் சாம்பார வச்சு தோச சாப்புடுவேன்; இல்லையின்னா இப்பவும் காரச்சட்னி கேப்பேன் பாத்துக்க!" என்று சொன்னவனுடைய பேச்சைக் கேட்டு சட்டென சிரித்து விட்டாள் வதனி.

"ம்ம்ம்! இப்டி சிரிச்சா எவ்ளோ அழகாயிருக்கு.....? அத விட்டுட்டு எப்பப்பாரு சிரிக்குறேங்குற பேருல
பல்ல மட்டும் தெறந்து காமிச்சுக்கிட்டு?" என்றவன் தலையை உலுக்கிக் கொண்டு,

"ஏய்...... நாங்கேட்டத மறந்துடாம எங்கிட்ட சொல்லு; இப்டி சிரிச்சு என்னைய ஏமாத்தாத ஹெட்லைட்டு!" என்றான்.

"எதுக்கு நீ இப்டி அடிக்கடி என்னைய ஹெட்லைட்டுன்னு கூப்டுற ஜெயன்?" என்று அவனிடம் விசாரித்தவளிடம்,

"அதுவா.... அது வந்து நம்ம நஸாருப்பய இருக்கான்ல அவன் அடிக்கடி மரியத்த பட்டனுன்னு கூப்டுவான்; எதுக்குடா அப்டி கூப்புடுறன்னு கேட்டா, அதெல்லாம் உங்கிட்ட சொல்ல முடியாதுடான்னு ஸீன் போடுவான்!"

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now