🌻 அழகி 14

280 14 1
                                    

"யேய்.... ஓங்கி அப்பிருவேன் பாத்துக்க..... எப்ப பாரு வாழ உடுங்க, வாழ உடுங்கன்னுட்டு! நடந்தத மறந்துட்டு ஒரு புது வாழ்க்கைய வாழுன்னு தான்டீ நானும் உங்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்!" என்று அவளிடம் கோபக்குரலில் பேசினான்  ஜெயன். கிட்டத்தட்ட இரைச்சலாக ஒலித்த அவனது பேச்சு காதில் விழுந்தும் தலையை நிமிர்த்தாமல் தன்னுடைய முடிவில் தெளிவாக இருந்தாள் பர்வதவர்த்தினி.

"இல்ல.... எனக்கு யாரும் வேண்டாம்! நானும் முகில்ம்மாவும் மட்டும் போதும்; நீங்க இனிமே இந்த மாதிரி மாடியில ஏறி வரவே கூடாது! நான் முகில்ம்மாட்ட சொல்லி படியை அடைச்சு கதவு போட்டுக்கப் போறேன்! எனக்கு உங்களை பாக்க வேண்டாம்; நீங்க எங்கிட்ட இப்டியெல்லாம் பேச வேண்டாம்! கீழ எறங்கிப் போங்க!"

"நான் இந்த வீட்டை காலி பண்றதுக்கோ இல்ல இங்கயே தங்குறதுக்கோ முகில்ம்மா முடிவு எடுத்தா போதும். நீங்க ஒண்ணும் முடிவெடுக்க வேண்டியதில்ல! தயவுசெஞ்சு என்னை எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கைய வாழ விடுங்க! உங்களுக்கு சீக்கிரமே ஒரு நல்ல வொய்ப் கிடைப்பாங்க...... என்னை அந்த மாதிரி உங்க பாட்னரா யோசிக்காதீங்க! அந்த விஷயம் கண்டிப்பா நடக்காது!" என்று சொன்னவளிடம் லேசான ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு,

"இன்னும் கொஞ்சங்கூட வளராம சின்னப்புள்ளத்தனமாவே தான் பேசுற! நடந்துக்குற..... ஒன்னைய பாக்குறத தடுக்க படிக்கு கேட்டு போடுவியா? போடு! அதையும் நான் எகிறிக் குதிப்பேன்! மறுபடியும் சொல்றேன். தூங்குறப்ப
நல்லா பெரிய போர்வைய போத்தி நிம்மதியா படுத்து தூங்கு.
போய்ட்டு வரட்டுமா?" என்றவன் தன்னுடைய இரண்டு விரல்களில் முத்தமிட்டு அதை அவளிடம் ஊதி ப்ளையிங்க் கிஸ்ஸாக கொடுத்து விட்டு கீழே இறங்கிச் சென்றான்.

வந்ததும் தன்னுடைய அன்னையை முறைத்தவன், "அமுதாம்மா! நீ ஏன் வர வர இப்டி ஓரவஞ்சன பண்ற? அவ ஒன்னைய நல்லாப் பாத்துக்குறா! நீ அவள நல்லாப் பார்த்துக்குற. அப்ப என்னைய யாரு பாத்துக்குறது? நீ அவளுக்கு மட்டும் புண்ணுக்கு பாத்து பாத்து எண்ணெயெல்லாம் தடவி விடுற? அப்ப எனக்கு யாரு தடவி உடுவா?" என்று முகிலிடம் கேட்டு அவரிடம் சண்டை போட்டான் ஜெயன்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now