🌻 அழகி 83

237 9 1
                                    

"இப்ப எதுக்கு இந்த பாலக் குடிக்குறதுக்கு புதுசா எங்கிட்ட பெர்மிஷன் எல்லாம் கேக்குற...? குடிக்காதன்னு சொன்னா மொத்த பாலையும் கீழ ஊத்திடப் போறியா?" என்று கேட்டவளிடம் வேகமாக தலையை ஆட்டியவன்,

"நீ என்ன சொன்னாலும் பால வாய்க்குள்ள தான் ஊத்திக்கப் போறேன்! ஊருக்குள்ள போயிப் பாரு.... அவேஅவேன் சரக்கடிக்கவே வெக்கப்பட மாட்டேங்குறானுங்க! குடிச்சுட்டு டான்ஸ் ஆடிக்கிட்டே வந்து கரெக்டா நம்ம வண்டி மேல தான் உழுவுறானுவ!"

"நான் வெறும் பால் குடிக்குறதுக்குப் போயி நீ என்னைய இப்டி ஓட்டுற?" என்று சொன்னவன் மதியத்தைப் போல் உனக்கு ஒரு மிடறு பால் வேண்டுமா என்று கூட கேட்காமல் அவ்வளவு பாலையும் ஒரே மூச்சில் குடித்து விட்டு அங்கு ஒரு ஓரமாக இருந்த தண்ணீர்க்குழாயில் பால் சொம்பை கழுவி விட்டு வந்தான்.

முறைத்துக் கொண்டு நின்றவளை இடையைப் பிடித்து அணைத்துக் கொண்டவன்,

"ஜெயனு பாவம் இல்லையா? இப்ப என்னத்துக்கு இப்டி மொறச்சுப் பாத்துக்கிட்டு இருக்க? வா ஒக்காருவோம்!" என்று சொல்லி விரித்திருந்த பெட்ஷீட் ஒன்றில் அவளுடன் அமர்ந்து கொண்டான்.

முட்டியைக் கட்டிக் கொண்டு வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளிடம், 

"அங்க என்னத்த பராக்கு பாத்துட்டு இருக்க? வானத்தயெல்லாம் பெறவு வேடிக்க பாக்கலாம். முதல்ல இங்க பாரு..... இதெல்லாம் எதுக்கு மாமான்னு இப்ப நீ எங்கிட்ட கேக்கணும்டீ ஹெட்லைட்டு!" என்று சொன்னவனை தலையத் திருப்பிப் பார்த்தவள்,

"எதுக்கு கேக்கணும்.....? பொண்டாட்டி என்ன கேட்டாலும் அத கஷ்டப்பட்டாவது வாங்கிக் குடுக்கணும்னு நினைக்குற  மானாரோட கான்செப்ட் உனக்கும் புரிஞ்சுடுச்சு போல.... நா உங்கிட்ட இதுவரைக்கும் என்னல்லாம் ஆசையா சாப்ட கேட்டேனோ அதெல்லாம் வாங்கி வச்சுருக்க! அந்த லிஸ்ட்ல பபுள்ஸ் கூட இருக்கு!" என்றாள் கொஞ்சம் எக்கி
சோப்பு நுரையை கையில் எடுத்து
ஊதி விளையாடிய படி.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now