🌻 அழகி 18

266 11 1
                                    

இன்றைய காலை வேளையில் முகில்ம்மாவிற்கு செய்யும் வேலைகளை செய்யாமல் தவறிப் போனதில் அவளுக்கு கொஞ்சம் மனவருத்தம் ஏற்பட்டிருந்தது உண்மை தான்! முகிலமுதத்தின் கட்டிலில் வந்து அமர்ந்து அவருடைய கையைப் பற்றிக் கொண்டு,

"ரொம்ப ஸாரி முகில்ம்மா! இன்னிக்கு நான் உங்கள கவனிக்குறதுல கொற வச்சுட்டேன்!" என்று சொல்லி அவரிடம் மன்னிப்பு கேட்டாள் வதனி.

"டேய் வதனிம்மா! சும்மாயிருடா நீ வேற.... ஸாரி ரவுக்கன்னுட்டு..... நீயும் மனுஷி தான? என்ன உணர்ச்சி, கிணர்ச்சி ஒண்ணுமேயில்லாத ரோபோட்டு மெஷினா என்ன? நீ இப்ப எங்களுக்கு செய்யுற வேலைக்கே இந்த கேனப்பயலும் நானும் ஒன்னைய இந்த சென்மம் பூரா மறக்காம இருக்கணும்! இதுல என்னவோ ஒருநாத்து வேல செய்யலின்னு ஸாரி வேற கேக்குற? மொதல்ல ஒக்காந்து சாப்டு! மத்ததயெல்லாம் பெறவு பேசிக்கலாம்!" என்று அவளிடம் சொன்னார்.

கண்களை கரித்துக் கொண்டு நின்றவள், இந்த சாப்பாட்டை நான் தான் கண்டிப்பாக சாப்பிட வேண்டுமா என்ற பாவத்துடன் நிற்க முகிலமுதம் அவள் முகத்தை கவலையாக பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் அதற்குமேல் பெரிதாக எதையும் பேச விரும்பாதவள் காலை உணவை சிரமப்பட்டு பல்லால் அரைத்து உள்ளுக்குள் முழுங்கி வைத்தாள்.

"ம்ம்ம்.... ஒங்க வயித்த நெறச்சு நல்லா கண்ணு தெரியுற அளவுக்கு சாப்ட்டு முடிச்சுட்டீங்கன்னா, குளிர்பொட்டிக்குள்ள இருக்குற பால எடுத்து, சட்டியில ஊத்தி, காய்ச்சி நாலு ஆத்து ஆத்தி ஒரு இருநூறு மில்லி பால நான் குடிக்க குடுக்க முடியுமாங்க பர்வத வர்த்தினி அவர்களே?" என்று கேட்டவன் அவள் தன்னைப் பார்த்த பார்வையில் அடுத்த நிமிடம்
பருப்பு டப்பாவை தன் கையில் எடுத்துக் கொண்டு அதை தட்டிக் கொண்டிருந்தான்.

"டேய்..... ராக்கோட்டானே!
பால கடையில இருந்து வாங்கிட்டு வந்தவனுக்கு அத காச்சி வாயில ஊத்த முடியாதாக்கும்.... அந்தப்புள்ள கிட்ட எவ்வளவு தான் வேல சொல்றதுன்னு ஒரு கணக்கில்லயா? எனக்குத்தே கால் ஒடஞ்சு கெடக்கு; ஒனக்கென்ன நல்லா செனக்கெழுத்தி மாதிரி தான இருக்க? அப்புறம் பால காச்சி குடிக்கிறதுக்கு எங்க நோவுது ஒனக்கு? செய்ய முடிஞ்சா இங்க குடி.... இல்ல இன்னிக்கு
ஒருநாளைக்கு கடையில போயி பாலக்குடி! இப்ப அங்க போயி நின்னுக்கிட்டு இப்ப என்னத்த கொட கொடன்னு உருட்டிக்கிட்டு கெடக்க?" என்று கேட்ட தன்னுடைய அன்னையிடம்,

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Onde as histórias ganham vida. Descobre agora