🌻 அழகி 69

224 11 1
                                    

அச்சுதனுடன் சென்ற வதனி அன்றைய இர‌வு தான் குன்னூருக்கு திரும்பியிருந்தாள். ஜெயனுக்கு அவனுடைய புதிய காரான மோனாலிசாவில் மாட்டுவதற்கு ஒரு ஸ்மைலி ஃபேஸ்
கார் டெக்கரும், முகில்ம்மாவிற்கு முகபடாம் மாட்டிய ஒரு யானையின் ஷோ பீஸூம் வாங்கி வந்திருந்தாள்.

"ஹப்பாடா! நம்ம வீட்டுக்கு வந்தாச்சு!" என்று எண்ணிய படி தெருவை அந்தப்புறமும் இந்தப்புறமுமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றாள்.

"தெருவுல நின்னுக்கிட்டு என்னத்த பராக்கு பாத்துட்டு இருக்க? நான் வண்டிய ஏத்த வேணாமா? உள்ள போயேன்!" என்று வீட்டிற்குள் நுழையும் முன் கடித்தவனுடைய கோபப் பேச்சைக் கேட்டு அழகு காட்டி உதடு சுழித்தாள்.

"கண்ணு.... வாய்யா... வாய்யா; ஊரெல்லாம் நல்லா சுத்திப் பாத்தியா? அங்க நல்லா சாப்டியா?
நீயில்லாம நாலஞ்சு நாளா முகில்ம்மாவுக்கு எதுவும் நல்லாவே இல்லடா தங்கம்! நாங்க அப்பவே சாப்டோம்; நீ சாப்புடுறியாடா?" என்று கேட்ட முகிலமுதத்திடம்,

"வேணாம் முகில்ம்மா! இப்ப தான் டிஃபன் முடிச்சு ஒரு டீயும் குடிச்சுட்டு வந்தேன். அச்சுதன் ஸாரோட ஊரு சூப்பர்! எல்லா இடமும் நல்லா சுத்திக் காட்டுனாங்க; நானும் அங்க உங்களையும் ஜெயனையும் மிஸ் பண்ணுனேன். உங்களுக்கு வாங்கிட்டு வந்த கிப்ட்ட காலையில எடுத்துத் தர்றேன்! இப்ப போய் படுக்கட்டுமா?" என்று கேட்டவளிடம்,

"போய் தூங்குடா; காலையில பாக்கலாம்!" என்று சொன்ன முகிலிடம் குட்நைட் சொல்லி விட்டு படிகளில் ஏறினாள் வதனி.

பாதிப்படிகளில் நின்று அவனை கட்டி அணைப்பதற்காக கையை விரித்தவளிடம்,

"ரெண்டு கையிலயும் பொட்டிய தூக்கிக்கிட்டு வந்துட்டு இருக்கேன்.... கண்ணு தெரியுதா இல்லையா ஒனக்கு?" என்று உறுமினான் ஜெயன்.

"என்ன நம்ம ஆளு..... இதயெல்லாம் எப்பவும் அவந்தான் செய்வான்? இன்னிக்கு நம்ம கேட்டதுனால ஸீன் போடுறானா?" என்று நினைத்து தோள்குலுக்கிக் கொண்டாள்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now