🌻 அழகி 42

254 13 5
                                    

தொடர்ச்சியாக நாலைந்து குழு விளையாட்டுகள் விளையாடும் போது ஒன்று ஜெயன் அவளது குழுவில் ஒட்டிக் கொண்டிருந்தான்; இரண்டு பேர் கொண்ட விளையாட்டு என்றால், அந்த விளையாட்டில் அவளுடைய pair ஆக இருந்தான். அந்த வேலை மிகவும் யதேச்சையாக நடப்பது போல மிகத்தெளிவாக திட்டம் தீட்டிக் கொண்டான்.

எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் ஜெயனுடைய கடும் முயற்சி வதனியுடைய மெத்தனத்தால் அவர்கள் இருவருடைய தோல்வியில் முடிந்தது.

"ஏன்டீ ஹெட்லைட்டு.... இப்டி வேணும்ட்டே தோக்குற? கொஞ்சம் ஒழுங்காத்தான் வெளையாடேன். அச்சுதன் ஸாரோட சித்தப்பா சித்தி தான் எல்லா வெளையாட்டுலயும் அடிச்சி பட்டையக் கெளப்பிக்கிட்டு இருக்காங்க..... மொத்தத்துல நாம மூணாவது எடத்துல இருக்கோம்; நீ கொஞ்சம் மனசு வச்சா நாம மொத எடத்த கூடப் புடிச்சுடலாம்!" என்று சொன்னவனிடம்,

"எங்கூட pair பண்ணனும்னு ரொம்ப ஆசப்பட்டீங்கல்ல மிஸ்டர் ஜெயன்? நீங்க மூணாவதுல இல்ல முப்பதாவது எடத்துல கூட இருங்க.... அதைப் பத்தி எனக்கு ஒரு கவலையும் இல்ல!" என்று கறாராக சொல்லி விட்டாள் வதனி.

"வெளையாடத் தெரியல, வெளையாட முடியலன்னா பரவாயில்ல..... எங்கூட கூட்டு சேந்தயில்ல? அப்ப தோத்துப்போன்னு வேணுமுன்னுட்டே கரம் வச்சு நம்மள போட்டுத் தள்ளுறா!
இவள வச்சுக்கிட்டு...... நாம எல்லா வெளையாட்டுலயும் ஜெயிச்சுட்டாலும்?" என்று நொந்து கொண்டாலும் தன்னுடைய ஏஎம் அம்மாவின் அருகாமை குளிர்கால பனிப்பொழிவு போல் ஜெயனுக்கு ஜில்லென்று தான் இருந்தது.

"ஓகே.... ஓகே.... மை டியர் பேமிலி மெம்பர்ஸ்! இவ்ளோ நேரமா எல்லா கேம்லயும் உங்களோட புல் எஃபர்ட் போட்டு நல்லா வெளையாடி முடிச்சீங்க; இப்ப நாம விளையாடப் போறது ஃபைனல் கேம்....இதுல ஜெயிக்குற ஒரே ஒரு pair க்கு மட்டுந்தான் நாங்க ஷீல்டு குடுப்போம். மத்தவங்க எல்லாருக்கும் சின்ன சின்ன கிப்ட் தான் கெடைக்கும்..... ஸோ உங்களோட முழு கவனத்தையும் கேம் மேல வைங்க.....!"

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Όπου ζουν οι ιστορίες. Ανακάλυψε τώρα