🌻 அழகி 48

203 14 3
                                    

"உன் வேண்டுதல் பலிக்குமான்னு எனக்குத் தெரியல!" என்று தோள்குலுக்கியவளை பார்த்து முறைத்தவன்,

"வாயில அடி மொதல்ல..... கண்டிப்பா உன் வேண்டுதல் பலிக்கும்னு சொல்லி நீயும் வேண்டிக்கிட்டு வந்து பொருள் வாங்கிக் குடு வா!" என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றான்.

முகிலமுதத்திடம் சொல்லி விட்டு கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த நிறைய கடைகளுக்குள் ஒன்றில் இருவரும் நுழைந்தனர்.

சின்னதில் இருந்து சற்று பெரிய வகை வரையிலான பிள்ளையார் சிலைகளை பார்த்துக் கொண்டிருந்த அவளிடம் இல்லை இல்லை என தலையை ஆட்டியவன்,

"அது வேணும் வர்த்தினி!" என்று ஓரிடத்தில் கையைக் காட்டினான்.

"எது வேணும் உனக்கு?" என்று கேள்வியாக திரும்பியவளிடம்,

நடுவில் ஆரஞ்சு நிறத்தில் பிளாஸ்டிக் பிள்ளையாரும், இருபக்கம் ஸ்வஸ்திக்கும் போட்ட கருப்புக் கயிறை தான் காட்டியிருந்தான்.

"இப்பயும் கருப்புக் கயிறு தானா வேணும்?" என்று கேட்டவளிடம்,

"ஆமா..... கையிலயே புள்ளையாரு இருந்தா நம்ம கைக்கு அப்டியே பவரு கெடக்கும் பாரு!" என்று சொன்னவனைப் பார்த்து லேசாக சிரித்தவள் அவன் கேட்ட கயிறையே அவனுக்கு வாங்கிக் கொடுத்தாள்.

"உனக்கு ஏதாவது வேணும்னா பாரும்மா; இது வேணும், அது வேணும்னு நீ எதையுமே எங்கிட்ட கேக்க மாட்டேங்குற? இந்த கம்மல் வேணுமா, பொட்டு, ஹேர்பின், கண்மை..... ஏய் இப்ப சமீபத்துல குன்னூர்ல ஷாப்பிங் போகயில கலர் கலரா ஹேர்பேண்ட் வாங்குனோமே.... அது!" என்று ஒவ்வொன்றாக கையை நீட்டிக் காட்டிக் கொண்டிருந்தவனிடம்,

"அது வேணும் ஜெயன்!" என்று அவனைப் போலவே கேட்டு அவனைப் போலவே கை காட்டியிருந்தாள் வதனி.

"எது...... ஃபேனா? அதெல்லாம்  விக்குறதுக்கு இல்ல! சும்மா அழகுக்கு வச்சுருக்காங்க!" என்று அவளிடம் சொன்னான்.

"இல்ல... அந்த ஃபேன் விக்குறதுக்கு தான் வச்சுருக்காங்க! நீ போய் வாங்கிட்டு வா; எனக்கு அதுல நாலு வேணும்.....!" என்று கேட்டவளை விசித்திரமான ஒரு பார்வை பார்த்து விட்டு இரண்டு கடை தாண்டி பக்கத்து கடைக்காரரிடம் சென்றான்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now