🌻 அழகி 65

233 12 2
                                    

"நான் அமுதாம்மாட்ட எதுவுமே கேக்கல வர்த்தினி. நேரா இங்க தான் வர்றேன். வெளிய இருந்தப்ப ஒனக்கு போன் போட்டேன்; அப்போ நீ போனையும் எடுக்கல..... வீட்லயும் ஒன்னைய காணும்முனதுமே ஏதோ பிரச்சனன்னு புரிஞ்சுடுச்சு! என்ன ஆச்சும்மா...? எங்கிட்ட சொன்னா தான நாம பிரச்சனைய சரி பண்ண முடியும்?"

"அத உட்டுட்டு இப்டியே விம்மிக்கிட்டு கெடந்தா...... இது ஒருமாதிரி நல்லாத்தான் இருக்கு; ஆனா நீ அப்பப்ப என் தோள்பட்டையில ஒன்னோட மூக்க மூக்க ஒரசுறியா? அதான் எனக்கு ஒருமாதிரி மூடாகுது!" என்று சொன்னவனை தன் சின்னக் கண்களால் எரித்தாள் வதனி.

"கண்ணாடி போடாம என்னைய மொறைக்கும் போது தான் நீ ரொம்ப அழகாயிருக்கடீ ஹெட்லைட்டு!" என்று சொன்னவன் தன்னுடைய கைக்குட்டையை பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து அவளது முகத்தை துடைத்து விட்டான்.

"விடு... நான் என்ன சின்னக் கொழந்தயா? எனக்கே மொகத்த துடைச்சுக்கத் தெரியும்!" என்று சொல்லி தன்னுடைய முகத்தை ஆட்டி நெளிந்து கொண்டு
முரண்டு புடித்தவளிடம்,

"ஆமா.....ஒனக்கு எல்லாம் தெரிஞ்சு அஞ்சாறு ஆச்சு! அங்கயும் இங்கயும் நெளியாம ஒரு எடத்துல ஒக்காருடீ..... இல்லன்னா மூக்க கடிச்சு வச்சுடுவேன்!" என்று மிரட்டி அவளை அமைதிப்படுத்தினான் ஜெயன்.

கால்களை விரித்து சுவரில் சாய்ந்து அவன் அமர்ந்திருக்க அவன் மார்பில் சாய்ந்து அவளும் கால்களை நீட்டியிருந்தாள்.

அவளைத் தேடிக் கொண்டு மாடிக்கு வந்தவனின் இடையைப் பற்றி அணைத்துக் கொண்டவள் தான்.... பதினைந்து நிமிடங்களாக ஒன்றுமே பேசாமல் அவன் மேல் வாகாக சாய்ந்து கொண்டு வாயைத் திறக்க மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டு இருந்தாள்.

"ஒம்மேல கோபப்பட்டு அமுதாம்மா ஒன்னைய ஏதாச்சு திட்டுனாங்களா வர்த்தினி?" என்று அவள் காதின் பின்னால் சில முடிக்கற்றைகளை ஒதுக்கியபடி மென்குரலில் கேட்டவனிடம் இல்லையென தலையாட்டியவள் அவனைப் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now