🌻 அழகி 66

220 12 1
                                    

மறுநாள் காலையில் ஆறரை மணிக்கு கோமதியுடன் சென்று நின்று அதன் கறவைக்காரருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான் ஜெயன். அவன் பேசுவதையெல்லாம் புரிந்து கொண்டது போல் தன் வாலையும், தலையையும் ஆட்டி அவ்வப்போது உடல் சிலிர்த்துக் கொண்டிருந்தது கோமதி. தாயின் கால்மாட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்த இளங்கோவின் அருகில் சென்றவன்,

"குட்டிப்பையா... என்னடா செய்யுற? நைட்டு நல்லா தூங்குனியா? வயிறு நெறஞ்சுச்சா ஒனக்கு? சீக்கிரமா பெரிய பையனா வளரணும்டா எளங்கோ; எத்தன நாளைக்கு தான் குட்டிப்பயலாவே இருந்து அம்மாவ நச்சுக்கிட்டே இருக்குறது சொல்லு பாப்போம்.....? நீ பெரிசா வளந்ததுக்கு அப்புறம் அண்ணே ஒனக்கு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்ன?" என்று அதன் வாயில் ஒரு சிறிய வாழைப்பழத்தை திணிக்க முயற்சி செய்தபடி அதனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

"யண்ணா.... கோமதி இங்க வந்ததுக்குப் பெறவு சந்தோஷமா இருக்காளா இல்லையான்னு எப்டிண்ணா தெரிஞ்சுக்குறது?" என்று கேட்டவனை பார்த்துப் புன்னகைத்தவர்,

"கோமதி சந்தோஷமா தானுங்க தம்பி இருக்கு! அதோட கன்னுக்குட்டிய போட்டு நீங்க இப்டி பாடாப்படுத்துறீங்க; அம்மாவ நைக்காதங்குறீங்க; கல்யாணம் பண்ணி வைப்பேங்குறீங்க! பொண்ணு பாத்து தர்றேன்னு வேற சொல்றீங்க..... கோமதி இத்தனயும் பாத்துக்கிட்டு பேசாமத் தான இருக்குது? இதுக்கு இங்க இருக்குறது பிடிச்சிருக்கு தம்பி!" என்று சொன்னார்.

"சரிங்கண்ணா! நீங்க சொன்னா கரெக்டா தான் இருக்கும்..... ஆமால்ல கோமதி? என்னம்மா நீயி?இப்பத்தான் எளங்கோவுக்கும் எங்களுக்கும் பாலு குடுத்துருக்க..... அங்கண சும்மா நிக்காம ஒன்னோட சாப்பாடு எதையாவது சாப்டு வா!" என்று சொன்னவனை ஒருமாதிரியாக பார்த்து விட்டு அவன் கையில் பால் பாத்திரத்தை திணித்து விட்டு கிளம்பினார் அந்த நபர்.

"நமக்குள்ள இருக்குறது அந்த அண்ணனுக்கு எப்டித் தெரியும்? அதான் எப்ப வந்தாலும் நம்ம பேசிக்கறத இப்டி குர்ருன்னு பாத்துக்கிட்டே கெடக்காரு. நீ ஒண்ணும் கண்டுக்காத. சாப்ட்டுட்டு இரு, இந்தா வந்துடுறேன்!" என்று சொன்னவன் கையில் பாத்திரத்துடன் வீட்டிற்குள் சென்றான்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now