🌻 அழகி 85

248 11 1
                                    

யேய்.... நஸாரு! வர வர ஒனக்கு கொஞ்சங்கூட பயமேயில்லாம போயிடுச்சு! இதுக்குத்தான்டா.... இந்த ஒங்கொணம் தெரிஞ்சு தான்டா நா ஒன்னிய கண்டுக்கவே கண்டுக்காம நாம்பாட்டுல பணத்த சேத்து வச்சுக்கிட்டே போயிட்டு இருந்தேன். கடன அடச்சி கார வாங்குனவொடனே ஒம்பொறுப்பு எல்லாம் காத்துல போயிருச்சு பாரு!"

"நா போயி புள்ளைங்க மூணயும் ஸ்கூல்ல விட்டுட்டு வந்துட்டேன்..... நீ இந்நேரம் எழுந்திரிச்சு குளிச்சு சட்டைய மாட்டிட்டு சாப்புட வந்து ஒக்காந்துருக்கணும்.... அத உட்டுட்டு இப்டி நல்லா செனப்பன்னி கணக்கா கட்டுலுல உருண்டுக்கிட்டே கெடந்தா பொழப்ப யாரு பாக்குறது?" என்று காலைப் பொழுதிலேயே தரமான திட்டுகளுடன் வந்து தன்னை எழுப்பிய பீவியிடம்,

"ஏன்டீ லூசு பட்டனு! திட்டுறது தான் திட்டுற.... என்னைய சோம்பேறி சிங்கம்னாச்சு சொல்லலாம்ல? நான் ஆம்பளப்பயடீ! நான் எப்டி செனையா இருக்க முடியும்? நீ தான் செனயா இருக்க முடியும்!" என்று கண்சிமிட்டியவனை குளியலறைக்குள் இருந்து முறைத்தபடியே வாஷ்பேஷினில் முகம் கழுவிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு ஒரு கப் நிறைய தண்ணீரைப் பிடித்தாள் மரியம்.

"ஏய்..... ஏய்! நான் பாவம், மெத்த கட்டிலெல்லாம் பாவம்! நமக்குள்ள பேச்சுவார்த்த எப்டி வேணாலும் இருக்கலாம்.... ஆனா இப்டி ஆக்ஷன் சீக்வன்ஸ்லலா எறங்காதடீ பட்டனு!" என்று கெஞ்சினான் நஸார்.

"டேய்.... நான் சொல்றதெல்லாம் ஒனக்குப் புரியுதா? புரியலையா?
முன்னயாவது பரவாயில்ல! பாயம்மா நம்மள கண்டாலே கிழிச்சு தோரணம் கட்டிக்கிட்டு இருந்துச்சு.... அதுனால நீ கத்துறத கத்து; நாங்க எங்க வேலையில ஒழுங்கா தான் இருக்கோமுன்னு நாமபாட்டுல போயிட்டு வந்துட்டு இருந்தோம்! இப்பல்லா பெரியவுக கரெக்டா இருக்காங்க நஸாரு.... அப்ப நாமளும் கரெக்டா இருக்கணுமா வேணாமா?" என்று ஆதங்கத்துடன் கேட்டவளை,

"இங்க வா! மொதல்ல பாத்ரூம்ல இருந்து மூஞ்சிய தொடச்சுட்டு வெளிய வந்து எம்பக்கத்துல வந்து ஒக்காரு!" என்று சொல்லி படுக்கையில் இருந்து எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அவளை தன்னருகில் அழைத்தான்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now