🌻 அழகி 6

403 13 1
                                    

"ஓ அதைத்தவிர என்ன வேணும்னாலும் சொல்லலாமா....? அப்ப சரி! நான் நிறைய யோசிச்சுட்டேன்! நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா பர்வதவர்த்தினி?" என்று கேட்டவனுடைய கேள்வியில் கண்களை பெரிதாக விரித்தவள், அவனை ஒரு விநோத ஜந்துவை பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள்.

"மிஸ்டர்..... முழுசா என்னோட பேர் தெரியுமா ஸார் உங்களுக்கு? பாத்து பத்தே நாள் ஆன பொண்ணு கிட்ட எந்த தைரியத்துல இப்டி ஒரு கேள்விய கேப்பீங்க நீங்க?
வாழ வழியே இல்லய்யா; ஏதாவது காசு, பணம், வேலை, வாழ்க்கை இதுல எதையாவது பிச்சையாப் போடுங்கன்னு உங்க கிட்ட நான் வந்து கேட்டேனா ஸார்?" என்று கோபக்குரலில் அவனிடம் கேட்டவளிடம்,

"உனக்கு நான் பேசுனது சரியா கேக்கலையா இல்ல நீ எம்பேச்ச சரியா கவனிக்கலையான்னு தெரியலம்மா! நான் இங்க வந்ததுல இருந்து ரெண்டு மூணு தடவ உன் பேரச் சொல்லி கூப்ட்டேன்; உன் பேர் கூட எனக்கு தெரியாதுங்குற! உன் பேரு மட்டும் இல்ல பர்வதவர்த்தினி; இப்ப உன்னோட வாழ்க்கை வரலாறே எனக்குத் தெரியும்.....!"

"பொதுவா அமுதாம்மாவோட  மனசுல எதுவுமே ரகசியமா நிக்காது; நீ வேற அவங்கட்ட புழிஞ்சு புழிஞ்சு அழுவுறியா? அவங்க எதோ சீரியல் கதைய சொல்ற மாதிரி எங்கிட்ட எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சொல்லிப்புடுறாங்க! வாழ வழியே இல்லன்னுட்டு யாரும் யார்கிட்டயும் வாழ்க்கைய பிச்சையா கேட்டெல்லாம் வாங்க முடியாதும்மா! எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. அத உங்கிட்ட வந்து சொல்றதுக்கு என்ன பெரிசா தைரியம் வேணும்ங்குற? ம்ம்ம்! எப்டி சொல்லி புரிய வைக்குறது உனக்கு.....?"

"கல்யாணம்னு ஒண்ணு பண்ணுனா இந்த மாதிரி பொண்ணோட தான்யா பண்ணிக்கிடனும் அப்டின்னு ஒவ்வொரு பையனும் அவனோட மனசுக்குள்ள ஒரு பொண்ண பத்தி எதிர்பார்ப்பு வச்சுருப்பான்ல..... அந்த எதிர்பாப்புக்கு பக்காவா பொருந்திப் போற பொண்ணு நீ!" என்று கேட்டவனிடம் தன் தலையில் இருந்த ஸ்கார்ஃபை கழட்டி விட்டு நின்றவள்,

"நானா....?" என்று அழுத்தமான பார்வையுடன் அவனிடம் கேட்டாள்.

"ஆமா.... நீயே தான்! அதென்ன நானான்னு உன்னைய நீயே மேலயும் கீழயுமா ஒரு லுக்கு உட்டுட்டு கேக்குற? என்ன கொறைச்சல் உனக்கு? நல்ல மனசு இல்லையா? நல்ல குணம் இல்லையா? தன்மையான பேச்சு இல்லையா? அனுசரணையான இயல்பு இல்லையா? என்ன இல்ல உங்கிட்ட?"

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now