'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -69

570 13 0
                                    

69

வீட்டுக்கு வந்தவர்கள் அவரவர் வேண்டாத தெய்வங்கள் இல்லை. மயான அமைதி. பள்ளி சென்று திரும்பிய சிறுவர்களுக்கு விஷயம் சொன்னதும், அவர்கள் ஆர்வினை பார்த்தே ஆகவேண்டும் என அடம் பிடித்து அழவும், நரேந்திரன் அழைத்து வந்து பார்க்க வைத்தான்.
குழந்தைகள் அழுது,

"ஆர்வின் அங்கிள் எழுந்திரிங்க கேம் விளையாடலாம்" என அவனை போட்டு உலுக்கத் தொடங்கவும்,

நந்தனாவும், வான்மதியும் அவர்களை சமாதானம் செய்வதற்குள் களைத்துப் போனார்கள் எனலாம்.

"நீங்க போங்கடா செல்லங்களா! ஆர்வின் அங்கிள் ரெண்டு நாளில் வந்துடுவார்.. அப்புறம் என்ன ? நான் எதுவும் சொல்லமாட்டேன்.. நீங்க வீட்டுக்குள்ளேயே ஷூட்டிங் கேம் நடத்துங்க" என்றாள் கணவனை பார்த்தவாறு, அவன் இப்பவே எழுந்து பழையபடி ஜம்ப் பண்ணி ஓடமாட்டானா? என்ற ஏக்கத்துடன்.  அவர்கள் சமாதானமாகாமல் நரேந்திரன் வற்புறுத்தி அழைத்துப்போக வேண்டியதாகிப்போனது.

லட்சுமி இல்லத்தில் யாரும் சரியாக தூங்கினார்கள் இல்லை. சாப்பாடோ தீண்ட ஆள் இல்லாது இருந்தது.

அங்கே ஒருத்தி ஹாஸ்ப்பிட்டலே கதி என இருந்தாள். ரெண்டு நாளிலேயே வாடிய மலராகி போனவளைப் 'பார்த்து பெரியவர்கள் மேலும் கலங்கித்தான் போனார்கள்.

நந்தனா ஓயாது ஆர்வின் காதில் பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருப்பாள்.

"ஆர்வின்..!! ஈபிள் டவரில் நாம ஒண்ணா ஏறணும்! என்னைக் கூட்டிகிட்டு போவாய் தானே ? உன் கூட பாரிஸை நான் அளக்கணும்.. நீ பிறந்த ஹாஸ்ப்பிட்டல்.. நீ படிச்ச ஸ்கூல்.. உன்னோட பிரண்ட்ஸ்.. எல்லாம் பார்க்கணும்.. அப்புறம் இஸ் புஸ்ன்னு பேசுவியே பிரெஞ்சு.. அது எனக்கு கத்துக்கொடு! ரொம்ப ஏங்கிப்போய் இருக்கேன்டா.. நீ நெருங்கும் போது உன்னை வதைத்தவள்.. இப்போ உன் நடமாட்டம் இல்லாது, உனக்காக, நீ பேசுவதுக்காக காத்திருப்பது நரகத்தை விடக் கொடுமைடா.." என அவள் ஏதாவது பேசிக்கொண்டே இருந்தாள்.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now