'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -50

387 12 0
                                    

50

இரவு உணவு வேளை முடிந்ததும் தம்பதிகளுக்கு சாந்தி முகூர்த்தம்.

எப்படி நந்தனாவிடம் சொல்வது என கிசுகிசுத்த பெரியவர்கள், தங்களுக்குள் ஒரு முடிவு எடுத்தவர்களாக மாடிக்கு வந்து ஆர்வினுக்கு விஷயத்தை சொல்லவும், அவன் இப்பொழுது ஓடிப்போய் அருவாளை எடுத்து வந்து, ஜம்ப்  பண்ணி பால்கனி கம்பியில் ஏறி நின்று கொண்டு வேண்டும் என்றே சத்தம் போட்டான்.

விஷ்ணுவையும், ப்ரேமையும் தொடர்பு கொள்ள முடியாது தோற்றுப்போனவளாக நந்தனா சத்தம் கேட்டு வெளியே வந்தாள். 

பால்கனி கம்பியில் ஆர்வின் அருவாளைக் காட்டி ஏதோ சத்தம் போடுவதை பார்த்தாள் .

"இவனை எதுக்கு இந்த பெருசுங்க டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு?"  எரிச்சலாக தனக்குள் கேட்டவாறு வந்தவள் காதில் அவர்களது பேச்சு விழுந்தது.

"நீங்க எல்லாரும் மாபியா கேங்குக்கு பார்ட்னராக போக வேண்டியவங்க..எனக்கு எதுவும் தெரியாதுன்னுறதால  என்னை ஏமாத்திக்கிட்டே இருப்பீங்களா? இப்பவே டாடிக்கு கால் போடுறேன். என்னை வந்து எமெர்ஜென்சியா கூட்டிகிட்டு போங்க என்று .."

"டேய் முதல்ல கீழே இறங்கடா ! காலு சிலிப்பாச்சு  விழுந்து அடிபட்டுடுவே" சந்திரமோகன் பதட்டத்துடன் சொல்ல, அவனா கேட்பான் ?

"அலோ மிஸ்டர் சந்திர்மோகன்! ஒரு பெரிய மனுசனை நம்பி மீ யை உங்க கையில் பிடிச்சு கொடுத்து இருக்கார் என் டாடி.. யூ ..வெரி டேஞ்சர் பார்ட்டி" என அவன் மாமனாரை பார்த்து சொல்ல, அவரோ அவனது விளையாட்டை ரசித்தவாறு,

"டேய் இது எல்லாம் வழக்கமாக நடக்குறது தாண்டா.."என அவர் சொல்லவும் நந்தனா வந்து,

"என்னப்பா சத்தம்? ஒரு நாளிலே என் நிம்மதி போச்சு" என  தலையைப் பிடித்தவாறு ஆர்வினைப் பார்த்து,

"ஏய் என்ன கூத்து பண்ணிக்கிட்டு இருக்கே?" என அவன் மேல் பாய்ந்தாள். 

"டாக்டர் வந்திட்டீங்களா? வாங்க.. வாங்க.. உங்க பேமிலி ஒரு மாபியா டேஞ்சர் பேமிலி" என அவன் சொல்ல நந்தனா,

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Wo Geschichten leben. Entdecke jetzt