'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -53

372 10 1
                                    

53

நந்தனா வழிக்கே சென்று அவன் தனது ஸ்டைலை கையாள தொடங்கிய அன்றே அவள் தத்தளிக்க ஆரம்பித்திருந்தாள்.

விமல் போலவோ, மற்ற நண்பர்கள் போலவோ ஆர்வின் ஒத்து ஊதுபவனாக இல்லை.
பயந்து அவள் பேசுவது சரி என்று அவர்கள் போல் தலையாட்டுபவனாகவும் இல்லை. எதிர்த்து அவர்கள் கருத்து சொல்வதில்லை.

ஆனால் ஆர்வின் எதிர்த்து கருத்து சொல்லும் விதம் அவனது பாணியில் இருந்தது. முற்றிலும் வேறுவிதமாக அவளை தள்ளாட வைத்துக்கொண்டிருந்தான்.

அவள் கூட ஒத்து பாடுகிறானா? இல்லை கவிழ்க்கிறானா? என புரியாது விழித்தாள். எந்த விதத்தில் அவனை ஏற்றுக்கொள்வது? எந்த உறவாக அவனை நெருங்குவது? என அவளுக்குப் புரியவில்லை.

அவள் ஒரு திட்டம் வகுத்தாள். ஆனால் அவனோ மசியவில்லை. தாலியைக் காட்டி அவனை மடக்க நினைத்தாள். அவனோ அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் அதை வைத்தே அவள் வாயை அடைத்தான்.

அவன் தெளிவாகவும், பிராட்டிகலாகவும், நேருக்கு நேர் உண்மையாகவும், பேசுவதைப் பார்த்து மலைத்துப்போனாள்.

ஒரு மனதோ இந்த கல்யாணத்தின், தாலியின் புனிதமும், தெரியாத பாரின்காரன் கூட எப்படி வாழ்வது? கணவனாக ஏற்றுக்கொண்டாலும், மனைவி என்ற உறவின் அருமையையும், காதலையும் புரிந்து கொள்ள முடியாத வர்க்கத்தினை சேர்ந்தவன், எப்படி காலம் முழுதும் சேர்ந்து வாழ்வான்? என எண்ணிப்பார்த்தது.

வேறு நாடுகளில் ஓடும் இரு நதிகளை இணைத்து பாலம் கட்டுவது என்பது எவ்வளவு சாத்தியம் இல்லையோ, அது போல தானே எண்ணியவாறே அவள் மாடிப்படிகளில் இறங்கி வந்தாள்.

சினம் கொள்ளாதவன், சுடு சொல் பேசாதவன், சத்தமின்றி, நெருக்கமின்றி, தொடுகை இன்றி, வார்த்தைகளால் நந்தனாவை அசைத்தான். அவளையும் அறியாது அவள் மனது அவன் வசமாகிக் கொண்டிருப்பதை உணராது அவளும் அவனை வதைத்தாள். அவனும் அவளின் வதைப்பிற்கு வேண்டும் என்றே வளைந்து போனான்.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now