'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -32

381 12 0
                                    

32

தொடர்ந்து வந்த நாட்களிலும் மேற்கொண்டு செய்யவேண்டிய நடவடிக்கைகளை ஆர்வின் கூட சேர்ந்து நந்தனா டீம் ப்ரோக்ராம் போட்டது. அடுத்த நாள் எல்லோரும் கிளம்பும் நாள். ஊர் மக்களிடம் இருந்து விடைபெற்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு தமது லக்கேஜ்களை ரெடி பண்ணினார்கள்.

"ஏண்டா உம்முன்னு இருக்கே?" விமலைப்பார்த்து நண்பர்கள் கேட்க,

"எனக்கு இருக்குற கடுப்புக்கு அந்த பாரின்காரனை அதோ அந்த அருவியில் தள்ளிவிட்டா என்னென்னு இருக்கு" என்றான் பற்களை கடித்தவாறு.

"டேய் நந்தனா காதுல விழுந்திடப் போகுது" பிரேம் அதட்ட,

"அவன் வந்ததில் இருந்து அவ கண் பார்வை எல்லாமே அவன் மேல தான் கவனிச்சீங்களா?" எரிச்சலுடன் கேட்டான்.

"அது நார்மல் தானேடா! அவ வீட்டுக்கு விருந்தாளியா வந்திருக்கிறான்.. அவளை நம்பி அனுப்பி இருக்காங்க.. அவனோ புதுசு ..அக்கறை இருக்கும் தானே வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்கா" விஷ்ணு சொல்ல,

"அதைவிட நீ அவன் மேல காண்டு ஆகுறதுக்கு அவன் ஒண்ணும் நந்தனாவை அபேஸ் பண்ணற ஆளு இல்லையே! அவனே அவன் பாடு, அவன் லவ் பாடுன்னு ஜாலியா இருக்கான். நந்தனா அவன் கூட சகஜமாக பேசியது குறைவு.. அவளே பத்தடி தள்ளி நிற்குறா! நீ எதுக்கு தேவையில்லாம பிரஷரை ஏத்துறே?" பிரேம் கேட்டதும், விமல் ஏதோ சொல்ல வாயெடுத்தான், நந்தனா வந்து சேர்ந்தவாறு,

"என்ன விமல் இன்னும் கிளம்புற ஐடியா இல்லையா?" என கேட்டாள்.

"நாங்க ரெடி நந்து! உன்னோட பனிக்கரடி பார்ட்டிதான் காணோம்" என்றான் அவன். போட்டுக்கொடுத்த குரூர சதோஷம் உள்ளே பரவ.

"என்னோட பனிக்கரடியா? அப்படியே முடிவு பண்ணிட்டியா? எங்கே அவன்?" அவள் சிறு கோபத்துடன் கேட்க,

"பக்கத்துல அருவிக்கு போயிருக்கார் நந்து! வந்துடுவார்" என பேக்கை வேனில் வைத்தவாறு சிந்துஜா மாடியைப் பார்த்துச் சொன்னாள்.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Où les histoires vivent. Découvrez maintenant