'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -37

330 8 0
                                    

37
அதே நேரம் விமல் வண்டியில் போய்க்கொண்டிருந்த அவனின் தாய்,

"விமல் நந்தனா நம்ம குடும்பத்துக்கு சரிவருவாளா? அவளின் பேச்சும், அவளின் குணத்தையும் பார்க்குறப்போ குடும்பத்துக்கு அனுசரித்து போறவளாட்டம் தெரியலையே.. அவ இஷ்டத்துக்கு மத்தவங்களை இழுப்பா போலிருக்கே" சுகன்யா அது வரை வாய் மூடியவாறு இருந்தவள் கேட்க,

"என்னம்மா அவ முற்போக்கு வாதி.. படிச்சவ.. இப்போதைய ஜெனரேஷன் அப்படி தான் இருப்பா"

"அது சரிடா! ஆனா உனக்கு அடங்கி, எனக்கு அடங்கி நடப்பாளா? நாளைக்கு பொட்டிய தூக்கிட்டு போகும் பேர்வழி போல தோணுது"

"விடு சுகன்யா! ..அவ அப்படிப் போனா அவளுக்குத் தான் பாதிப்பு! பார்ட்னரா இருக்குற  ஹாஸ்ப்பிட்டல், அப்புறம் அவ வாழ்க்கை, எல்லாம் கேள்விக்குறியாகும்" சுந்தர மூர்த்தி சொல்ல,
"அப்பா அது எல்லாம் ஒண்ணும் அப்படியாகாது! மேரேஜ் மட்டும் ஆகட்டும் நான் அவளை மாத்திடுறேன்! கவலையை விடுங்க" என சொல்லி அப்பொழுது அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

அடுத்தடுத்த நாட்களில், அந்த வீடு பழையபடி சஜநிலைக்கு வரவே அடம் பிடித்தது. ஆர்வினும் சரி சந்திரமோகனும் சரி, சரியாக உணவு உண்டார்களா? தூங்கினார்களா? என்றால் இல்லை.

ஒருவருக்கு ஒருவர் பேசாது மவுனம் காத்தார்கள். ஆர்வின் முன் நிற்கவே சந்திரமோகனுக்கு தகுதி இல்லாதது போல் குற்ற உணர்வு தின்றது. தன்னைப் பார்க்கும் போது அவருக்கு அப்படி ஒரு உணர்வு வரவே கூடாது என்று அவன் ஒதுங்கி இருந்தான்.
அவனும் வெளிப்பார்வைக்கு தான் ஸ்ட்ராங்கா இருக்கிறேன் தனக்கு பாதிப்பு இல்லை  என்று காட்டிக்கொண்டிருந்தான். நந்தனா இருக்கும் வீட்டில் அவளை பார்த்துக்கொண்டு இருக்க, இனி தன்னால் ஒரு கணமும் முடியாது என தோன்ற தொடங்கியது. 

அவனது  இதய பம்ப் எந்த நேரத்திலும் வெடித்துவிடுவேன் என எச்சரித்தது. அடக்கி அடக்கி, வெளியே எந்த உணர்வுகளையும் காட்டாது வைத்து இருந்தான். உள்ளுக்குள் நொறுங்கிய அவனது காதல் கோபுரக் கற்கள் உணர்ச்சிகள் இல்லாது கொஞ்சம் கொஞ்சமாக பாறை போல மாறத்தொடங்கியது. அதற்கு முற்றிலும் மாறான முகபாவத்தையும் பேச்சையும் வெளியில் காட்டிக்கொண்டிருக்க அவனால் மட்டுமே முடியும் என அவன் இதயம் திட்டி தீர்த்தது.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now