'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -12

429 10 0
                                    

12

"அங்கிள் கிரவுண்டில் பிளே பண்ண போவோமா?" சிறியவர்கள் ஆளாளுக்கு வந்து குதித்தவாறு கேட்டனர்.

"கண்ணுகளா இப்போதான் சாப்புட்டீங்க! போய் டீவி பாருங்க! இல்லை ஏதாச்சும் எடுத்துப் படிங்க! ஈவினிங் விளையாடலாம்" சீதாலட்சுமி சொல்ல,

ஆர்வினும் "நான் ரெடி பிரண்ட்ஸ்! பட் பாட்டிமா சொல்வதை கேட்கணும்! நீங்க ரெஸ்ட் எடுங்க! ஈவினிங் கிரவுண்டில் புட்பால் ஆடலாம்" என அவன் அவர்களை அணைத்தவாறு சொல்ல, அவர்களும் கோரஸாக ஓகே என்றுவிட்டு ஓடிப்போனார்கள்.

சந்திரமோகன் அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு தோட்டத்துக்கு போனார்.

"டேய் மாப்பிள எனக்கு டென்ஷனா இருக்குடா"

"புரியுது! உங்க டாட்டர் மவுத் ஈபிள் டவரை விட பிக் சைசா இருக்கும்ன்னு மீ நினைச்சுப் பார்க்கல! பட் இப்பவே மீ ஸ்டார்ட் பண்ணுது மை பாரிஸ் ஸ்டைலை" என அவன் தோழன் போல அவரது தோள்களில் கைகளை போட்டவாறு சொன்னான்.

"இவன் தான் மாப்பிளை! நாளைக்கு என்கேஜ்மெண்ட்! அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம்ன்னு.. சொல்றதை விட்டு எதுக்குப்பா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" எனக் கேட்டவாறு அங்கே வந்தான் நரேந்திரன். சந்திரமோகன் திரும்பி,

"அடேய் என்னடா எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசிகிட்டு இருக்கே?" என அவர் அடிக்க கையை ஒங்க, அதை தடுத்த ஆர்வின்,

"மாமா கூல்! மேரேஜ் இப்படி பண்ணலாம்.. பட் நனு என்னோட வாழணும்! போர்சிங் பண்ணி மேரேஜ் பண்ணிக்க வைக்க போறீங்களா? ஆர்ட்னரி இண்டியன் பாதர் அண்ட் பிரதர்ன்னு ப்ருவ் பண்றீங்க"

"...."

"எனக்கு அது வேணாம்! நெவெர் அக்செப்ட் தட் போர்ஸ் மேரேஜ்..அவ பர்மிஷன் இல்லாம அவளை கட்டிக்க ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்"

"அதுக்கு அவ உன் மேல லவ்வு பீலிங்ஸ் பொளந்துக்கிட்டு வருதுன்னு சொல்வான்னு எதிர்பார்க்காதே! அதுக்கு சான்ஸே இல்லை! ..அவளுக்கும், லவ்வுக்கும் உங்க ஊரு ஈபிள் டவர் உசரம்" நரேந்திரன் முறைப்புடன் சொல்ல, ஆர்வின் அவனது முதுகில் தட்டி,

"அந்த டவரில் கூட ஏறி நின்னவன் நான்! பொறுமை பிரண்ட்! பொறுமை! 22 இயர்ஸ் பொறுத்தவனுக்கு ஒரு ஆறு மாசம் முடியாதா? நானே பீல் பண்ணல நீங்க எதுக்கு?" அவன் சிரிப்புடன் கேட்க,

"இல்லைடா! என் மனசு ஏனோ அடிச்சுக்குது?" சந்திரமோகன் கலக்கத்துடன் சொல்லியவாறு தோட்டத்து சேரில் தொப்பென்று அமர்ந்தார். அவர் அருகே ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்த ஆர்வின்,

"எது அடிச்சுக்கிட்டாலும் நனுவை நான் விட்டுப்போக மாட்டேன் மாமா! அவ கூடத்தான் என் லைஃபும், டெத்தும். எதுன்னாலும் அவ சாய்ஸ் பண்ணிக்கட்டும்! எனி சைட் எபெக்டுக்கும் நான் ரெடியாக இருக்கேன். சோ மறுபடியும் ரிப்பீட் பண்றேன்.. நீங்க நார்மலா, ரிலாக்ஸா இருங்க"

"...."

"நனு என் பொறுப்பு குவிக்கா அவ வாயாலேயே இவனை புடிச்சு இருக்குப்பான்னு சொல்ல வைக்கிறேன்" என நம்பிக்கை கொடுத்தான். அந்த நம்பிக்கை பொய்யாகப் போகிறது எனத் தெரியாமல்.
நரேந்திரனும்,

"அப்புறம் என்னப்பா அவன் இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கும் போது நீங்க கவலைப்படுவதில் நியாயம் இல்லை ! நம்ம நந்தனா எங்கே போயிடப் போறா? டோன்ட் வெரி" என்றுவிட்டு ஆர்வின் பக்கம் திரும்பி,

"உனக்கு என்ன புரோகிராம்? ஈவினிங் வெளியே போலாமா?" எனக் கேட்டான்.

"யா கூடவே கிட்ஸ (kids) கூட்டிகிட்டு" என்றான் நரேந்திரனும் தலையாட்டிவிட்டுப் போனான்.
சந்திரமோகனுக்கு சத்தியனின் அழைப்பு வர அவர் நண்பன் கூட பேச ஆரம்பித்தார்.
(Waiting)

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now