'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -3

654 7 0
                                    

3
சத்யன், சந்திரமோகன் நட்பு, எல்கேஜி தொடங்கி இன்று வரை தொடரும் நட்பு. பெற்றவர்கள் இல்லாத சத்யனுக்கு சந்திரமோகன் தான் எல்லாமே. அவரது குடும்பம் தான் சத்யனின் உறவுகள்.

சென்னையில் இருவரும் ஒன்றாக படிக்கும்போதே சேர்ந்து தொழில் தொடங்குவதாகவும், கல்யாணம் செய்தால் தமக்கு பிறக்கும் குழந்தைகளை ஒன்றுக்குள் ஒன்று கலப்பதாகவும் முடிவு எடுத்திருந்தனர்.

அதன் பின் சத்தியன் ஸ்காலர்ஷிப்பில் மேற்படிப்புக்கு லண்டன் வந்து படித்து முடித்தார். பின் பிசினஸை தொடங்க ஆராய்ந்த போது அவருக்கு பிடித்துப் போன இடம் பாரீஸாகிப் போனது. பாரிஸில் தொழில் தொடங்க வசதி காரணமாகவும், அங்குள்ள வளங்கள் ஏதுமானதுமாக இருக்க, அந்த நாடும் பிடித்துப் போக, அங்கேயே தங்கியும் விட்டார்.

சரண்யாவை பொண்ணு பார்த்தது சந்திரமோகன் தான். அவர் "வா !" என்றதும் சத்தியன் போனதும், மணம் முடித்ததும் இன்று போல் இருக்கு.

ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு A2Z வரையிலான சகல பொருட்களையும் வாடிக்கையாளர்கள் கேட்பதுக்கு  இணங்க ஏற்றுமதி செய்து கொடுக்கும் நிறுவனங்கள் அவர்களது நிறுவனங்கள். சென்னை, பாரிஸ் என இரு தலை நகரங்களிலும் இருவரும் திறம்பட கொண்டு நடத்தினார்கள்.

வாரிசுகள் வளர்ந்ததும் தொழில்துறையிலேயே அவர்களை படிக்க வைத்ததும், அதன் பின் ஆர்வினும், சந்திரமோகனின் மகன் நரேந்திரமோகனும் பொறுப்புகளை எடுத்துக்கொண்டதும் இல்லாமல் இணை பிரியா நண்பர்கள் வேறாகிப் போனார்கள்.

ஆர்வினை விட வயதில் அதிகம் பெரியவனாக நரேந்திரன் இருந்தாலும், ஆர்வின் அவனுக்கு சிறந்த தோழன் தான். எந்தவித பாகுபாடும் இன்றி, கொஞ்சம் கூட மமதை இன்றி, எவ்வளவு பட்டம், பதவிகள் அவன் வாங்கி குவித்து இருந்தாலும், ஆர்வினின் எளிமையும், அவனது பக்குவமும், பழகும் இனிமையும், சிறு வயதிலியே பொறுப்புகளை விரும்பி ஏற்றுக்கொண்ட  புத்திசாலித்தனமும் பார்த்து வியந்தவர்கள் தான் சந்திரமோகனும், நரேந்திர மோகனும்.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें