'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -38

303 8 0
                                    

38

அடுத்தடுத்த நாட்கள் நிச்சயதார்த்த ஒழுங்குகள் பார்க்க நீலா இறங்கிவிட்டாள்.

ஆர்வின் நந்தனாவை முழுதும் தவிர்க்க முயற்சித்தான். பட்டிமன்றத்தில் பேசுவது போல பேசிவிடாது அதை செயல்படுத்தவும் வேண்டும் என்று தீர்மானித்தவன் தன்னை ஒரு நிலக்கு கொண்டு வரப்பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தான்.

அவனது மனதை யாரிடமாவது கொட்டிவிட்டால் என்ன? என்று கூட சில நேரம் இதயம் அழுதது. அவனால் அலறும் இதயத்தை அடக்க முடியாது திணறிப்போனான். ஒரு கட்டத்தில் நரேந்திரனிடம் வந்து,

"பிரண்டு பக்கத்துல சர்ச் இருக்கா?" எனக் கேட்டான்.

"சர்ச் இருக்குடா.. ஆனா நம்ம கோவில்.." எனத் தொடங்க,

"ப்ளீஸ் பிரண்டு ! எனக்கு சர்ச்சுக்குப் போகணும்.. உன் வண்டி சாவி கிடைக்குமா?" எனக் கெஞ்சியவன் விழிகளில் எதை உணர்ந்தானோ பெருமூச்சு ஒன்றை விட்டவனாக,

"நீ எவ்ளோ மறைச்சாலும் உன் கண்கள் காட்டிக்கொடுக்குதடா ...கொட்டி விடுடா! நடிச்சுக்கிட்டு இருக்குறது கொடுமைடா! கொட்டுடா! என்கிட்டே  கொட்டு!" என நரேந்திரன் அவனை ஆவேசமாக உலுக்கினான்.

"கொட்டத்தான் போறேன்.. சர்ச்சுக்கு போய் மாதாகிட்டே.. அவ காலடியில.. ப்ளீஸ் என்னை விட்டுடு! நான் ரிலாக்ஸ்சாகி நல்ல மைண்டில் திரும்பி வரேன்.. டோன்ட் வெறி" என்றுவிட்டு போனான்.

நரேந்திரனுக்கு  கவலையும், கோபமும் வர தந்தையை தேடிப்போனான்.

ஆர்வின் நவிகேட்டர் பார்த்து வண்டியை செலுத்தியவன் மனது தாங்க மாட்டேன் என துள்ளியது. நகரத்தை விட்டு ரொம்ப தூரம் வந்தவன், வெட்ட வெளி புல் தரைகள் தெரிய, வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு நடந்தான்.

எந்த ஒரு ஆள் நடமாட்டமும் இலலாத இடம். தலையை இரு கைகளாலும் பிடித்து வானத்தை அண்ணார்ந்து பார்த்தவன்,

"கொட்டுடா! கொட்டு!" என மனது கட்டளையிட்டது.

"கட்டி வைச்சு இருக்கும் என்னை அவிழ்த்து விடு!" என இதயம் திமிறியது.  அவன் வெட்டவெளியை  வெறித்துப் பார்த்தது,

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now