'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -25

328 7 0
                                    

25

நந்தனா செந்தில்மோகன் ஹாஸ்பிடலில் தற்காலிகமாக சர்வீஸ் செய்ய ஆரம்பித்தாள். அவள் கூடவே அவளது டீமும் இணைந்து கொண்டது. அவளது ஹாஸ்ப்பிட்டல் கட்டி முடிக்கும் வரையிலான ஒப்பந்தத்துடன் செந்தில்மோகன் தான் வேலை சேயும் ஹாஸ்ப்பிட்டலில் அவர்களுக்கு அனுமதி வாங்கி கொடுத்தார்.

அவளது பவுண்டேஷனுக்கு வாரா, வாராம் ஏதாவது வேலை வந்து கொண்டுதான் இருந்தது. அதைப்பார்த்த ஆர்வின்,

"கிரேட் மாமா ! நனுவோட ஏஜில் இருக்குற பொண்ணுங்க பேஸ்புக், டிவிட்டர், மேரேஜ் குழந்தை, என்று இருப்பாங்க, பட் ரொம்ப டிப்ரெண்ட் ...சோசல் சர்வீஸ் பண்றதும் பொறுப்பாக இருப்பதும் அவ்வளவு ஈஸி இல்லை" என மாமனாரிடம் அவளை புகழ்ந்து பாராட்டினான்.

அடுத்த வாரமே அவர்கள் குழு ஒரு கிராமத்துக்கு புறப்படத் தயாரானது. அதைப்பார்த்தவன் சிந்துஜாவிடம்,

"பிரண்ட் நானும் உங்க கூட வரலாமா?" எனக் கேட்டான் .

"நந்து ஒத்துக்கொள்ளணுமே பிரண்டு" எனத்தயங்கினாள்.

"இதுக்கு எதுக்கு தயக்கம்? நானே கேட்குறேன்" என்றவன் அவளிடம் வந்து,

"டாக்டர் மேடம் if you dont mind நானும் உங்க கூட வரேன்" என பவ்யமாக அவனது உயரத்தில் பாதி குறைந்து குனிந்து கேட்டவனைப் பார்த்து,

"நம்ம சங்காத்தமே வேணாம்ன்னு கும்பிடு போட்டுவிட்டு ஓடிப்போன ஆளு! இப்போ கூழைக்கும்புடு போடுறதை பார்க்க" என அவள் நக்கலாக இழுத்தாள்.

"வாட் சங்காத்தம்? ஒரு நாத்தமும் அடிக்காது! பாரிஸ் பர்பியூம் பாடி டாக்டர் ! ப்ளீஸ் கூட்டிப்போங்களேன்" என்றான் குழந்தை போல கெஞ்சியவாறு. அவளோ அடக்கமாட்டாது சிரித்தாள்.

"ஸ்ஸ்ஸ்...ஆர்வ் கண்ட்ரோல்டா .ஸ்னோ சிரிச்சுக்கிட்டு கொட்டுறது போல இருக்கே.. மீ க்கு ஹார்மோன்ஸ் பிரேக்கிங் நியூஸ் வாசிக்குதே பேபி ...'' அவன் குனிந்து தனது அவஸ்தையையும், கண்களை வெட்டி அதில் கொந்தளித்த காதலையும் மறைத்தான்.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now