'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -31

330 8 0
                                    

31

ஜாலியாக சுத்திப்பார்க்க போகிறான் என நினைத்தவர்களுக்கு அவன் பலதையும் பார்த்து, கற்று, அலசி, ஆராய்ச்சி பண்ணிவிட்டு வந்திருக்கிறான். என்றதும் நந்தனா அவனை கோபம் மறந்து நட்புடன் பார்த்தாள்.

"பிரண்டு இங்கு எல்லாமே அப்படித்தான்பா! இது எல்லாம் நேற்று, இன்று, இல்லை இதுக்கு எல்லாம் காரணம் தேடவே முடியாது. யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டாங்க." ராம்கோபால் சொல்ல அவன் திரும்பி அவரைப்பார்த்து,

"உங்களுக்கு பழகிப்போயிருக்கலாம்.. புதுசா இல்லாமல் இருக்கலாம்.. பட் என்னைப்போல உள்ளவங்க வந்தா ரொம்பவும் பாதிக்கப்படுவாங்க.. தென் கேள்விகள் கேட்பாங்க.. என்ன காரணம் இருக்க போகுது ? என ஆராயுறதை விட, யார் வழி அமைச்சுக்கொடுப்பாங்கன்னு காத்து இருப்பதை விட, அவங்க, அவங்க முடிஞ்சவரை ஒவ்வொரு வாரமும் ஒரு கிராமம் விசிட் அடிச்சு முடிஞ்சவரை ஹெல்ப் செய்யலாம்.. நந்து கேர் பவுண்டேஷன் ஓனருக்கு என்னோட சல்யூட் ! ஒண்டர்புல் ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கீங்க கீப் இட் அப் !" என்றவன் நந்தனா அவனைப் பார்க்க,

"நான் ஒன்னு சொல்லட்டா.." என அவளது விழிகளை நேருக்கு நேராக பார்த்தான். அவளும் வியப்பு, மலைப்பு மாறாது நின்றிருந்தவள்,

"ம்" கொட்டினாள்.

"இங்கே இருக்குற சுற்றி வர உள்ள கிராமங்களில் ஒரு ஸ்மால் மேட்ச் பாக்ஸ் அளவுக்கு கூட நர்சிங் ஹோம் இல்லைன்னு கேள்விப்பட்டேன். சிட்டியில் கோடிகளை கொட்டி ஹாஸ்ப்பிட்டல் கட்டுற பணத்தில் பார்ட், பார்ட்டா பிரிச்சா.. பல கிராமங்களுக்கு நர்சிங்ஹோம் சிறப்பாக கட்டலாமே.. சிட்டியில் எதுக்கு ஹாஸ்ப்பிட்டல்? அங்கே உள்ளவை போதாதா?" என அவன் கேட்க அவள் திகைத்தவாறு பார்த்தாள்.

விமல் கோபத்துடன்,
"ஏய் மிஸ்டர்! அது எங்க புராஜெக்ட், எங்க இஷ்டம், எங்கே கட்டணும்ன்னு? நாங்க தான் டிசைட் பண்ணனும்" என்றான். ஆர்வினோ சிரிப்புடன்,

"அது சரி ப்ரோ! நான் தப்பா சொல்லலியே.. நீங்க கொட்டி கட்டுறது எல்லாம் பின்னாடி பெட்டியில் அள்ளி சுவிஸ் பேங்க் பேலன்சை கூட்டத்தான் போறீங்க.. அது நார்மல் தான்.. யாராக இருந்தாலும் பிஸினஸ் தான் பார்ப்பாங்க.. உங்க பணம், உங்க படிப்பு" என்றவன் நந்தனாவின் பக்கம் திரும்பி,

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Dove le storie prendono vita. Scoprilo ora