'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -63

413 10 1
                                    

63

அவன் லைனிலே இருந்தவவனுக்கு, தாய், தந்தை குரல் கேட்டது.

கட்டாரில் டிரான்சிட், இந்தியா வருவதற்கான அடுத்த விமானத்துக்கு காவல் இருந்த சத்யனும், சரண்யாவும் வீடியோ காலில் வந்தார்கள்.

சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று பாரிசில் இருந்து கிளம்பிய தம்பதிகளுக்கு சந்திரமோகன் குடும்பம் மாத்தி, மாத்தி எல்லாம் எடுத்து சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்தது.

அவர்களுக்கு ஆச்சர்யம், கூடவே தாம் இல்லாது பெத்த மகனுக்கு கல்யாணம் 'நடந்தேறியது ஒரு பக்கம் வருத்தமாக வந்தது. உடனே இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அந்தக்கல்யாணம் நடந்ததை எண்ணி மனதை தேற்றிக்கொண்டார்கள்.

அவர்களது உணர்வுகளை படித்த சீதாலட்சுமி,
"சத்தியா..ரெஜிஸ்ட்ரேஷனையும், ரிஸப்ஷனையும் உங்க கண் முன்னாடி செய்துடலாம். எங்களுக்கு இந்த சான்சை விட்டா ஆர்வினுக்கு என் பேத்தியை சொந்தமாக்க முடியாதுன்னு தோணிச்சு மன்னிச்சுக்கோப்பா" என கேட்டார்.

"என்னம்மா இது? பெரியவங்க இத்தனை பேர் முன்னாடி நாம நினைச்சு பார்க்காத வேகத்துல சின்னவங்களுக்கு கல்யாணம் ஆகிடுத்து. அதுவே சந்தோசம்" என்றார்.

"டாடி நீங்க விரும்பினா வரும் போது கட்டாரில் இன்னொரு செயின் வாங்கி வாங்க.. மீ நனு கழுத்துல உங்க முன்னாடி கட்டிட்டா போச்சு" என்றான் ஆர்வின்.

அவனது வீடியோ பார்த்தவர்கள் சிரிக்க,.
"ஆமாண்டா! அப்படியே ஆளுக்கொரு தாலி வாங்குங்க! இவன்கிட்டே கொடுங்க! என் பொண்ணு கழுத்துல தாலிகளா தொங்கட்டும்...'' சந்திரமோகன் ஆர்வினை முறைத்தார்.

அவனோ சிரித்தவனாக,
"உங்க பொண்ணு வயலென்டில் இறங்காத வரைக்கும் எவ்ளோ செயின் வேணும்னாலும் மாட்டலாம் மாமா" என்றான்.

நந்தனா அவனைப் பார்த்து உதட்டைக் குவித்து,
"உதை வாங்காதே!" என்றாள்.

"நீ இன்னுமாடா வீடு வந்து சேரல?" நரேந்திரன் முறைக்க,

"டிராபிக் ..! பாரு உங்க வீட்டுக்கு வண்டியில வர்ற டைமுக்கு, நான் பாரிஸுக்கு பாதி sea தாண்டி இருப்பேன்" என்றான் அவன் சோர்வாக,

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now