'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -18

327 7 0
                                    

18

நந்தனா குளித்து பிரஷ்ஷாக வர ஆர்வின் அதே இடத்தில் தரையில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

கோபம் தணிந்து தான் செய்த செயல் உரைத்தது.
எந்த ஆம்பிளையையும் அவள் கை நீட்டி அடித்தது இல்லை. எந்த ஆணையும் அவள் தன்னை மறந்து பார்த்தது இல்லை. நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை கூடுமானவரை ஆண்களை கண்டால் ஒதுங்கியே போவாளே தவிர, மீறி கை நீட்டும் அளவுக்கு போனது இல்லை.

அவள் நெருப்பு என்று தெரிந்த பலர் அவளிடம் நெருங்குவது இல்லை. அத்தோடு அவள் செல்வந்தர் வீட்டு பெண் நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கி போனவர் சிலர். விமலுடன் நட்பான பின் அவளுக்கு எந்த ஆண்களாலும் பிரச்சனை வராது பார்த்துக்கொண்டான். அவளது நண்பர்கள் மூன்று பேர் அவர்களை கூட கண்டிக்கும் நோக்கில் செல்லமாக குட்டுவாளே தவிர ஆர்வினை சாத்தியது போல சாத்தியது இல்லை.

வந்த சில நாட்களிலேயே ஆர்வினை எந்த உரிமையில் அடித்தாள் ? எது தூண்டியது? என்ன வந்து பல நாள் பழகியவள் போல் அடிக்க செய்தாள்? அவனும் இசைந்து எதிர்ப்பு காட்டாது ஏன் அடிகள் வாங்கினான்? என எண்ணி பார்த்தவாறே.

"பாவி! கடன்காரா என்னைக்கூட ராட்சசியாக்கிட்டியே! மூஞ்சியைப்பாரு, உன்னை விளாசினதுல என் விரல்கள் தான் வலி கண்டது மிச்சம்! சாத்து வாங்கினவன் மாதிரியா இருக்கான்? விருது வாங்கியவனாட்டம் போஸ் கொடுத்துக்கிட்டு" முணுமுணுத்தவாறே அவனை கடந்து போகப் பார்த்தாள். அவனோ எந்த சலனமும் இல்லாது பார்வை எங்கோ இருக்க சிந்தனை வசப்பட்டு இருந்தான்.

ஒரு டாக்டருக்கே உரிய இரக்க குணத்தில் ஒரு நிமிடம் நின்று நிதானமாக அவன் இருந்த கோலத்தைப்பார்த்தாள்.

"ஓ காட் என்ன இப்படி இருக்கிறான்? நாலு அடி தாங்காத ஆம்பிளையாடா நீ ? சொகுசா வாழ்ந்த பாடியோ.?" கேட்டவாறு முழங்காலிட்டு அவன் முன் உட்கார்ந்தாள்.

அப்பொழுது கூட அவன் அசையவில்லை. அவன் தனது ஆராய்ச்சியில் இருப்பது தெரியாதவள், சொடக்கு போட கை எடுத்தாள். அவனது கன்னத்திற்கு அவள் பார்வை போனது அவளது விரல் தடங்கள் தெரிய,

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now