'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -40

347 11 0
                                    

40

"நிச்சயதார்த்தத்துக்கு வரமுடியாத தோழிகள், வெளிநாடுகளில் செட்டிலான தோழிகள் என்று மாறி, மாறி போன் செய்தார்கள்.

தோட்டத்து மறுமுனையில் நந்தனா சந்தோஷமாக அவர்களுடன் பேசி முடித்து, மொபைல் சார்ஜும் இறங்கிப் போக, இடை நிறுத்திவிட்டு வந்தாள்.

வந்தவள் கண்களில் ஆர்வினும், பாட்டியும் தோட்டத்தில் பேசிக்கொண்டு இருப்பது தெரிந்தது.

"என்ன பனிக்கரடி வில்லி கூட ஒண்ணா கூட்டணி வைச்சுக்கிட்டு இருக்கு.. என்னவாக இருக்கும்?" என தனக்குள் கேட்டவாறு அவர்களை நோக்கி வந்தாள் .

சீதாலட்சுமி கண்களால் அவள் வருகையை சுட்டிக்காட்ட, சட்டென்று ஆர்வின் முக பாவத்தை மாற்றியவனாக, தன்னை ஏறிட்டவளை இவனும் சலனம் இல்லாது ஏறிட்டான். அவனது கண்கள் சிவந்து காணப்பட,

"என்ன பாரிஸ் பார்ட்டி காலையிலேயே அடிச்சுடுத்தா? இல்லை நைட் அடிச்சது தெளியலையா?" எனக்கேட்டாள். அவன் கண்சிவப்புக்கு காரணம் அவன் குடித்ததால் தான் என காரணம் கண்டுபிடித்து.

அவன் புரியாது பாட்டியைப் பார்த்து விழிகளாலேயே "என்ன சொல்றாள்?" என கேட்டான்.

அவரோ அவள் மேல் ஏக கோபத்தில் இருந்தவர்,
"நீ குடிச்சிருக்கியாம் ..உன் கண்ணு சிவப்புக்கு இவ கண்டுபிடுப்பு!" என்றார் கடுப்புடன்.
அவன் ஆச்சர்யப் புன்னகை தவழ,

"டாக்டர் உங்க நாட்டுல கண்ணு ரெட் ஆனா அதுதானா மீனிங்? இருங்க கூகிள்க்கு போன் போட்டு சொல்லிடுறேன்.. அவங்க சர்ச்சிங் சர்வரில் உடனே போட்டாகணும்" என மொபைலை தூக்க, அவளோ,

"அப்போ உன் கண்ணு சிவப்புக்கு குழவி கொட்டிடுத்துன்னு கதை அளக்க போறியா?"

"குழவி ? யூ மீன் ஓல்ட் லேடி ஆயா கிழவி மீயை அடிச்சிங்?" என அவன் யோசிப்பது போல கேட்க அவளோ வந்த சிரிப்பை சினமாக மாற்றி,

"ஏய் லூசு!" என கைகளால் அவன் கழுத்தை நெறிக்க வந்தாள். அவன் சிரிப்புடன்,

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Onde histórias criam vida. Descubra agora