'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -35

364 9 0
                                    

35

அடுத்த நாள் ஞாயிறு காலை லட்ச்மி இல்லம் முதல் பூகம்ப ஆட்டம் காணும் நாளாக அமையக்காத்திருந்தது.

நந்தனா எழுந்ததும் முதல் வேலையாக விமலுக்கு போன் போட. விமல் தெளியாத மப்புடன் அவளது எண்கள் தெரிய பாய்ந்து எடுத்தான். குரலை பதட்டமாக வைத்துக்கொள்ளாமல், வரவழைத்த சாதாரண குரலுக்கு மாற்றி வழக்கம் போல்.

"ஹாய் நந்து! குட் மார்னிங்" என்றான். அவளும்,

"ஹாய்டா ! என்ன நைட் முழுக்க டென்ஷனாக இருந்தியோ?" என கேட்டு சிரித்தாள். 

"ச்சே" என மழுப்பலாக அவன் சிரித்தான்.

"குட் பாய் அப்படித்தான் கூலாக இருக்கணும்" என்றவள் "உன்னோட பேரண்டசை அழைச்சுட்டு வந்து என்னோட பேரண்ஸ்கிட்டே பேசு" என்றதும். அவளது சம்மதம் தந்த குஷியால் விசில் அடிக்க இவள் காது செவிடாக,

"டேய் காது அவுட்டு! நான் வைச்சுடுறேன்.. நீ பெரியவங்களோடு கிளம்பி வா!" என்று விட்டு வைத்தாள்.

ஹாலில் பெரிய திரையில் கிரிக்கெட் ஓடிக்கொண்டிருந்தது. எல்லோரும் இருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.  நந்தனா பால்கனியில் அமர்ந்து கட்டுரை எழுதிக்கொண்டிருந்தாள்.

விமலின் வண்டி அவர்கள் வீட்டு வாசலில் நிற்க, அவனின் பெற்றோர்கள் சுந்தர்மூர்த்தியும், சுகன்யாவும், கூடவே இரு பெண்கள் சகிதம் இறங்கினார்கள். அவர்கள் கையில் பூ, புடவை தாம்பூலத்தட்டுகளுடன் உள்ளே நுழைந்தார்கள். சீதாலட்சுமி பழங்களை வெட்டியவாறு இருந்தவர் மூக்குக் கண்ணாடியை இறக்கி கீழ்க்கண்ணால் வந்தவர்களை பார்த்தார்.

"நீலு வருபவங்க தோரணை என்னமோ சொல்லுதே! பக்கத்தில் இருந்த மருமகள் நீலாவிடம் சொல்ல, அவளும் வாசலைப்பார்க்க, அவர்கள் தாம்பூல தட்டுகளுடன் நுழைந்து கொண்டிருந்தார்கள்.

"அத்தை எந்தப் பொண்ணை பொண்ணு கேட்டு வருகிறார்களோ?" என பதட்டமானாள்.

"வருகிறார்களோ இலலை உன் ரவுடி பொண்ணு தான் அவர்களை வரவழைச்சாளோ? வா என்ன கூத்துன்னு பார்க்கலாம்" என அவர் கைகளை துடைத்தவாறு ஹாலுக்கு வர, சந்திரமோகனும் மற்றவர்களும் புரியாது வந்தவர்களை வரவேற்று உட்கார வைத்துக்கொண்டிருந்தார்கள்.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Kde žijí příběhy. Začni objevovat