'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -24

329 6 0
                                    

24

அடுத்த நாள் ஆர்வின் வழக்கம் போல் ஜாக்கிங் செய்து விட்டு வந்து தோட்டத்து தரையில் மல்லாக்காப்படுத்து இருந்து கண்கள் மூடி காலை வெயிலை உள்ளுக்குள் வாங்கிக்கொண்டிருந்தான்.

நந்தனா ஹாஸ்ப்பிட்டல் கிளம்ப தயாராகி வெளியே வந்தவள், தோட்டத்தில் ஆர்வின் படுத்து இருப்பதை பார்த்தாள்.

"என்ன பாரீஸுல யாரும் பெட் ரூமில் தூங்குறது இல்லையோ?" எனக் கேட்டவாறு வந்து நின்றாள்.

ஆர்வின் சீரான மூச்சு பயிற்சி செய்து கொண்டிருந்தவன், கண்களை திறவாமலேயே,
"ஒரு தடவை பாரிஸ் வந்தீங்கன்னா.. பல டவுட்ஸ் கிளியர் பண்ணிவிட்டுவிடுவேன்" என்றான். அவள் முறைக்க அவனோ கண்களை மூடியவாறே,

"முறைக்காதீங்க! பேஸ் கட் டேமேஜ் ஆகிடும்ன்னு சொன்னேன் இல்லியா?" அவன் நினைவுபடுத்தியவாறு கேட்க,

"அலோ பெரிய ஞான திருஷ்டி புத்திரன் கண்விழிக்காமலேயே கண்டுபிடிச்சு கதை அளப்பீங்களோ?" அவள் கிண்டலுடன் கேட்டாள். அவன் கண்கள் மூடிய நிலையிலே,

"மார்னிங்கில் மார்க்கமா பேசலாமா? என்ன மேட்டர்ன்னு விஷயத்துக்கு வாங்க" என்றான்.

"இத பாருங்க.. நான் உங்களை பிரண்டாக அக்செப்ட் பண்ணணும்ன்னா ரெண்டு கண்டிஷன்" என்றாள். அவன் அப்பொழுது கண்களை திறந்தவன்,

"ஒன்லி டூ தானா?" எனக்கேட்டான். அவளோ முறைத்தவாறு,

"ஒண்ணு என் வருங்கால கனவு..''

"வாட் வருங்கால கணவனா?" எனஅதிர்வுடன் கேட்டவாறு துள்ளி எழுந்தான். அவள் ஸ்டெதஸ்க்கோப்பால் ஒன்று வைத்தவளாக,

"ஸ் ..ஸ்ஸ்ஸ்.. என்ன சொல்றீங்க?" என்றான் வாங்கிய அடியின் இடத்தை தடவியவாறு,

"ஏய் லூசா! முழுசா பேச விடுறியா? என் வருங்கால கனவு..மீன்ஸ் பியூச்சர் ட்ரீம்ஸ் ஹாஸ்ப்பிட்டல் அதுக்கு சூப்பராக டிசைன் போட்டுத்தந்ததுக்கு.."

"ஓ அதானே பார்த்தேன்.. தென்..?" என்றவாறு அவன் குறும்புடன் பார்த்தவாறு எடுத்துக்கொடுத்தான்.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now