'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -55

359 10 0
                                    

55

"என்னங்க அவன் கத்திவிட்டு போறான். எனக்கு பயம்மா இருக்குங்க" அதுவரை மூச்சை பிடித்தவாறு இருந்த நீலா கலவரத்துடன் சொல்லவும்,

"அம்மா! ஜாமீனிலே வந்து இருக்கான். குடிகாரன் போதையில் ஏதோ உளறுறான்னா அதை நினைச்சு நீங்களும்" நரேந்திரன் தாயின் அருகே வந்து சமாதானம் செய்தவனாக சொன்னான்.

நந்தனா நாடியில் கை ஊன்றி எதையோ யோசித்தவாறு இருந்தாள்.

"பழகும் போது தெரியல.. விஷப்பாம்பு கூட பழகுறேன்னு.. இப்போ அது எங்கே வந்து எப்படி கழுத்தை இறுக்குதுன்னு பாருங்க! என்ன நடக்கப் போகுதோ?" சீதாலட்ச்மி பேத்தியை முறைத்தவாறு சொல்லவும்,

"பாட்டி என்ன இப்படி ஒரு லாங்குவேஜ் பேசுறீங்க? எனக்கு தலை சுத்துது" ஆர்வின் புரியாது சீதாலட்சுமியின் மடியிலிருந்து தலையைத் தூக்கிக்கேட்டான்.

"நீ தூங்குடா! உனக்கு புரியாமல் இருக்கிறதே நல்லது. பாவி எப்படி அடிச்சு இருக்கான்? பார் கன்னத்துல ரேகை தெரியுது" கவலையுடன் சீதாலட்சுமி அவனின் கன்னத்துக்கு சிந்துஜா நீட்டிய க்ரீமை பூசியவாறு சொன்னார்.

"ஒரு அடி திருப்பி கொடுக்க தெரியாத ஆம்பிளையா இருக்கியே" நரேந்திரன் வேண்டும் என்று தங்கை முன்னால் அவனை சீண்ட, நந்தனாவுக்கு நெஞ்சுக்குள் சுள் என ஒன்று தைத்துப் பார்க்க

"பாரிசில எல்லாரும் பேபியாகத் தான் இருப்பாங்களாக்கும்" என்றாள். எதுக்கு எரிச்சல் வருது? எனத் தெரியாத எரிச்சலுடன்.

"என்னங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணியும் நிம்மதி இல்லை. ஏதோ எல்லாம் நடக்கப் போகுதுன்னு சொல்லுது. எனக்கு பிரஷர் எகுறுது.. என" நெஞ்சைப் பிடித்துக்கொண்டு தொப்பென்று சோபாவில் அமர்ந்தாள்.

எல்லோரும் அதிர்ச்சியாக, நந்தனா திடுக்கிட்டு சட்டென்று எழுந்து தாய் அருகே ஓடி வந்தாள் .

"அம்மா!" என அவள் கையைப் பற்ற சிந்துஜா அதற்கிடையில் முதலுதவிகளோடு வந்து விட்டாள்.
நீலாவை பரிசோதனை செய்துவிட்டு ஆசுவாசப்படுத்தினார்கள். ஆர்வின் எழுந்து வந்தவன் முழங்காலிட்டு அவள் முன் அமர்ந்தான்.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now