'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -9

462 10 0
                                    

9

நந்தனாவின் அறைக்குள் நுழைந்தவனுக்கு அவளே தன் மேல் வந்து மோதி விழுவது போன்று ஒரு வித உணர்வு. அந்த அறை முழுதும் வந்த நறுமணத்தை மூச்சை இழுத்து உள்ளுக்குள் பரப்பியவனுக்கு அவளின் வாசனை அதுவாகத்தான் இருக்க வேண்டும் என மனது சொன்னது.

கட்டிலின், டேபிளின், ஜன்னலின் விரிப்புகள், சுவற்றில் மாட்டி இருக்கும் படங்கள், டேபிள் விளக்கு, சகலதும் அவள் மிகவும் ரசனையானவள் என பறை சாற்றியது.

மெடல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பீரோ அதை சுற்றிவர தொங்கிக்கொண்டிருந்த பூக்கள் எல்லாம் அவள் வாழ்க்கையை ரசித்து, ரசித்து வாழும் ஒருத்தி என சொன்னது.

மெல்லிய புன்னகை பூக்க அவளது கட்டிலில் அமர்ந்தான். அதை வருடியவனுக்கு அவளது மேனியை வருடும் உணர்வு. உள்ளுக்குள் குளிர் பரப்ப மெல்ல சாய்ந்து கண்கள் மூடி அந்த உணர்வை அனுபவித்தான்.

"நனு உன் அறையே என்னை கொல்லுதே! நீ என் மார்பில் சாய்ந்து எப்படி கொல்வாயோ?" வாய்விட்டு கேட்டவன்,

எதிரே மாட்டியிருந்த அவளது புகைப்படத்தை பார்த்து காதல் கட்டுக்குள் நிற்காது துள்ளி குதிக்க எழுந்தான்.

ஒரு குழந்தைகள் காப்பகம், சுற்றிவர நிறைய குழந்தைகள் மத்தியில் அவளும் ஒரு குழந்தை போல தன்னை மறந்து தனக்கான உலகத்தில் தொலைத்த சந்தோஷத்தில் நின்று இருந்தாள். அவளது புகைப்படத்தில் நெற்றியில் தன் நெற்றி வைத்து அவள் எதிரில் இருப்பது போல கற்பனை செய்தவாறு பேச ஆரம்பித்தான்.

"நீ எந்த கேரக்டராக இருந்தாலும் என்னால் உன்னை ஹேட் (வெறுக்க) பண்ண முடியாது பேபி! நீ என் லவ்வர் இல்லை.. என் ஓய்வ் இல்லை.. என் லங்ஸ் முழுக்க (நுரையீரல் முழுக்க) பில்லப் (நிறைஞ்சு) ஆகியிருக்கும் ஆக்சிஜென்!" என்றவாறு அவளது கன்னங்களை வருடியவன் தன்னை மறந்து பேசிக்கொண்டிருந்தான்.

"நீயும் நானும் இந்த உலகமே ஜலூஸி  ஆகும் அளவுக்கு வாழணும்!  எப்படி என் கையில் நீ பிறந்த போது உன்னை வாங்கினேனோ, அப்படி நமக்கான பேபியை நான் வாங்கணும்! நிறைய ட்ரீம்ஸ் mon  amour (மோனமூர் = எனது காதலே)"

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Wo Geschichten leben. Entdecke jetzt