'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -39

331 7 1
                                    

39
லட்சுமி இல்லம்

நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் நந்தனா, விமல் நிச்சயதார்த்த கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

"நந்து! நிச்சயதார்த்தம்.. கொஞ்சம் வெட்கப்பட்டா நல்லா இருக்கும்" விஷ்ணு சொல்ல அவன் முதுகில் ஒன்று வைத்தவள்,

"என்னமோ புதுசா ஒருத்தனை பார்க்குறது போல இவனைப் பார்த்து வெட்கப்பட சொல்ற?" என விமலை சுட்டிக்காட்டி சிரித்தவாறு கேட்டாள் நந்தனா.

"டேய் அவ வெட்கப்படலைன்னா..நான் வெட்கப்படுறேன்" விமல் சொன்னான்.

"போட்டேன்னா" என அவள் கையை ஒங்க அங்கே  சிரிப்பொலி பரவியது.

ஆர்வின் கண்கள் நந்தனா  மேலேயே நிலை குத்தி நின்றது.  அவன் ஓரமாக கைகளை குறுக்கே கட்டியவாறு அங்கே நடப்பவைகளை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் இதயமோ "இது உனக்கும் அவளுக்குமான நிச்சயதார்த்தம்! இது நீ இருக்க வேண்டிய இடம்!" என சொல்ல அதை அடக்கிவிட்டு கண்கள் முழுதும் அவன் காதல் கொழுந்துவிட்டு எரிய அவளையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான்.
அதைக்கவனித்த சிந்துஜா, வியந்து போனவளாக அவனருகே வந்து,

"பிரண்டு இந்த பார்வையை அவகிட்டே ஒரு தடவையாவது நீங்க வீசி இருக்கலாம்" என வேதனையோடு சொல்ல,

"பார்வையில் என்ன இருக்கு பிரண்டு? மனசுல இருக்குறது தான் பார்வையில் வரும்! இந்தப்பார்வை பார்த்திருந்தாலும் அவ மனசுல  நான்  இல்லையே..அவ மனசுல என்னைப்பத்தி என்னவெல்லாம் இருக்குன்னு உனக்கு தெரியாதா?" என கேட்டு புன்னகைத்தான்.

நிச்சயதார்த்த பத்திரிகை வாசிக்க, இருவரும் திரும்பி பார்த்தார்கள்.  பேருக்கு சந்திரமோகன் சுரத்தே இல்லாது சிரிப்பை உதிரவிட்டவாறு நின்று இருந்தார். மோதிரம் மாற்றப்பட்டதும், சிந்துஜாவை செந்தில்மோகன் அழைக்க, அவள் போனதும் ஆர்வின்  தோட்டத்து சேரில் வந்து அமர்ந்தான்.

"முடிஞ்சுடுத்துடா! ஒரு பார்ட் முடிஞ்சு போச்சு! இனி பார்ட் டூ ! மேரேஜ் ! அதையும் இந்த கண்ணுல ரிஜிஸ்டர் பண்ணிட்டு பாரிசுக்கு பிளைட் ஏறிடலாம்" என தனக்குள் சொல்லிக்கொண்டான்.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now