'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -66

476 13 1
                                    

66

சிந்துஜா நரேந்திரனுக்கு அழைத்து "எல்லாமே விமலின் சதி, விஷ்ணுவும், ப்ரேமும் அதுக்கு சாட்சியா வந்து இருக்கிறார்கள். அவர்கள் மூவரும் கமிஷனர் சித்தார்த்துடன் தான் இருக்கிறார்கள்". என்று  தகவல் சொல்லவும், நரேந்திரன்,

"அப்பா அந்த விமல்தான்! சந்தேகமே இல்லை...! அவன் பிரண்ட்ஸ் சாட்சியாம்..! கவலையை விடுங்க! ஜென்மத்துக்கும் இவன் ஸ்டெதஸ்க்கோப்பை தொடாதவாறு நான் பார்த்துக்கிறேன்...அந்த சுந்தரமூர்த்தி எப்படி பிசினஸ் பீல்டுல இருக்கிறார்ன்னும் பார்த்துடுறேன்" என சீறிவிட்டு தங்கையை பார்த்து,

"நந்து ..! என் ஆர்வினுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு.. அதுக்கு காரணமான ஒரு எறும்பைக் கூட விட்டு வைக்க மாட்டேன்" என உறுமிவிட்டுப் போனான் .

நரேந்திரன் அவ்வளவு எளிதில் கோபம் கொள்பவன் அல்ல. ஆனால் அவனுக்கு கோபம் வந்தால் அதில் நியாயம் இருக்கும். இன்று வந்த கோபத்தில் அவர்களும் பங்கு ஏற்றுக்கொண்டவர்களாக அவனை தடுக்காது போக விட்டார்கள்.

நந்தனா பாட்டியின் தோளில் சாய்ந்தவாறு ICU க்கு வெளியில் உள்ள சேரில் அமர்ந்திருந்தாள்.

மற்றவர்கள்  ஆளுக்கு ஒரு திக்கில் கைகளை மேலே பார்த்து கூப்பியவாறு நின்று இருந்தார்கள்.

அங்கே  வந்தவனைக் கண்டதும் எல்லோரது கண்களிலும் அத்தனை வெறுப்பும், அருவருப்பும். விமல் உதட்டில் ஒரு நக்கல் வெற்றி புன்னகையுடன் நின்று இருந்தான்.

"நந்து!" என அவன் அழைக்கவும்  விலுக்கென்று எழுந்துகொண்டாள். அவனைப்பார்த்த பார்வையில் அந்தக்கணமே சுட்டு எரிக்கும் கொலை வெறி நெருப்புத் தாண்டவமாடியது.

"வாடா.. கொலைகாரப் பாவி! வா! என்ன துணிச்சல்டா உனக்கு? செய்யுறதையும் செய்துட்டு திமிராக என் முன்னாடியே வந்து நிற்குறே?" அவள் சீறும் பாம்பாக அவன் முன் வந்தாள்.

"இதப்பாரு நான்தான் செய்தேன்னு சாட்சி  இல்லை! அவன் இன்னும் உயிரோடு இருக்கானா ?" எனக் கேட்டவாறு எட்டிப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கியவன், 

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now