'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -61

380 11 0
                                    

61

லட்ச்மி இல்லம் மீண்டும் பிரகாசமானது.
"அப்பாடா! நம்ம வீடு சந்தோசக் களை கட்டிடுத்துடா" சீதாலட்சுமி சொல்ல எல்லோரும் புன்னகை பூத்தார்கள்.

"இதப்பாரு சந்திரா! பொண்ணையும், மாப்பிள்ளையும், நம்ம ஊரு குல தெய்வக்  கோயிலுக்கு அழைச்சுட்டுப் போய், பொங்கல், படையில் போட்டுடனும்.. திருஷ்டி, சுத்தி கையில  காப்பு கட்டியதும்.. நல்ல நாள், நேரம், பார்த்து  சாந்தி முகூர்த்தம் குறிச்சுடலாம்.. அதுவரை ரெண்டு பேரும் அவங்க, அவங்க அறையில இருக்கணும்.. சொல்லிட்டேன். அவன் வந்ததும் நான் சொல்லிக்கிறேன். அவன் சொல்லுகேட்பான். உன்  பொண்ணு அவனை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கணும்" என அவர் பேத்தியை முறைத்தவாறு சொல்ல,

அவளோ முகம் செம்மை படர, அவரை பதிலுக்கு முறைத்துவிட்டு பிரஷ்ஷாகி வர மாடிக்குப் போனாள்.  பெரியவர்கள் கோயில் பூஜைக்கான ஏற்பாடுகளை திட்டமிடத் தொடங்கினார்கள்.

நந்தனா குளித்து விட்டு புது மலராக மனதும், உடம்பும் ஒருவித இசை மீட்ட ஆர்வின் அறைக்குள் நுழைந்தாள். அவனது அறை அவனைப் போலவே ஸ்மார்ட்டாக வரவேற்றது.

அந்த கட்டிலில் தொப்பென்று விழுந்து உருண்டாள்.
"ஹையோ...என்ன பீலிங்ஸ்டா...? என்னால ஒரு சில மணி நேரமே  தாங்க  முடியல..  நீ எப்படித்தான் தாங்கிக்கிட்டாயோ? எனக்காக நீ பாரிஸ் பாதாளத்தில தவம் இருக்க, இந்த வேதாளம்  வேறு ஏதோ முருங்கை மரத்துல ஏற பார்த்தாளே. காட் இஸ் கிரேட்டா.. ? இல்லைடா உன் காதல் கிரேட்டுடா.!. என்னையே வீழ்த்திட்டியே.. படவா" என அவன் படம் டேபிளில் இருக்க எட்டி எடுத்து, அழுந்த முத்தம் ஒன்று வைத்தாள்.

அவளது மொபைல் வாட்சப் லவ் ஸ்டிக்கர்களாக வர எடுத்துப்பார்த்தாள். ஆர்வின் ப்ரொபைல். அவளது வாட்ஸப்புக்கு அனுப்பிக்கொண்டுருந்தான்.
முதல் தடவையாக அவனது நம்பரையும், ப்ரொபைலையும் பார்த்தவள்,  முகம் முழுதும் வெட்கம் வரவும், மனது குதூகலிக்க,

"என்னடா ஒரே ஹார்ட் ஸ்டிக்கர்ஸ்.. எனக்கு இங்கே லவ்வு பீலிங்க்ஸ் பொங்குது.. சீக்கிரம் வா" என ஒரு மெசேஜ் அனுப்பினாள். அவனோ வீடியோ அழைப்பையே எடுத்தான்.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Место, где живут истории. Откройте их для себя