'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -13

351 8 0
                                    

13

ஆர்வின் தனது மொபைலைப் பார்த்தவன் சார்ஜ் இல்லை என அது காட்டியது.

மாமனாரிடம் சைகையால் "நீங்க பேசுங்க நான் சார்ஜ் போடப் போறேன்" என்றுவிட்டுப் போனான்.

படிகளில் அவன் ஜம்ப் பண்ணி ஏறினான். தனது அறையின் முன் இருக்கும் பால்கனியில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த நந்தனா அதை அடித்து மூடிவிட்டு வந்து எட்டிப்பார்த்தாள்.

"ஏய் மிஸ்டர் ! நாலு ஊரை அடிச்சு எழுப்புறதுக்கு இப்படித்தான் உங்க ஊரில் படியேறுவீங்களா?" மாடிப்படிகளில் வந்து கொண்டிருந்த ஆர்வின் அவளது கேள்வியால் கொஞ்சம் திகைத்தாலும்,

"மிலிட்டிரியில இருக்க வேண்டியவ டாக்டரா எப்படி ஆனா?" என தனக்குள் கேட்டவாறு பதில் பேசாது போக முற்பட்டான்.

கீழே ஹாலில் இருந்தவர்களுக்கும் வீட்டுக்கு வந்த விருந்தாளியிடம் நந்தனா பேசும் விதம் சரியாக இல்லை எனத்தோன்றியது. ஆனால் யார் வாய் திறந்து சொல்வது? என யோசித்தவாறு ஒருவரை ஒருவர் பார்க்க,

சீதாலட்சுமி ஆர்வின் அமைதியாக போவதை பார்த்து,

"அடடா பையன் சாது போல இருக்கானே! திருப்பி ரெண்டு வார்த்தை பேசுவான்னு பார்த்தா. ம்ஹூம்" அவர் முணுமுணுத்தார்.

நீலா சாப்பிட உட்கார்ந்தவள் மனது "அவளை இங்கு யாரும் புரிஞ்சு கொள்ளாதது தான் பிரச்சனையே. கட்டிக்கப் போற நீயாவது புரிந்து கொள்ளவேண்டும்! புரிஞ்சுகொள்ளப்பா! என் பொண்ணு பர்ஃபெக்ட்! எல்லாத்திலும் சரியாக இருக்கணும்ன்னு நினைக்குறவ, அதுதான் அவளை எல்லோரும் விரோதி போல பார்க்க காரணமும்" என நினைத்தது.

ஆர்வின் தனதறை வாசல் வந்து நின்று ஸ்டைலாக திரும்பி அவளைப்பார்த்தான். வந்த கொஞ்ச நேரத்திலேயே அவளின் குணங்கள் புரிந்து போனது.

"ஏங்க நீங்க டாக்டரா? இல்லை மிலிட்டரி கேம்ப் வைச்சு நடத்துறீங்களா?" எனக் கேட்டானே பார்க்கலாம்.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now