'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -41

348 9 0
                                    

41

அடுத்த நாள் விமல் தனது சந்தோஷத்தை நண்பர்கள் படை சூழ பார்ட்டி வைத்து கொண்டாடி மகிழ்ச்சியில் மிதந்தான். கல்யாண ஒழுங்குகள் நடக்க ஆரம்பித்தன. ஆர்வினும் முடிந்தவரை உதவிகள் செய்து கொடுத்தான்.

பெற்றவர்களை தொடர்பு கொண்டு "ஊர்கள் சுற்றிப்பார்க்க போவதால் பத்து நாளைக்கு போன் எடுக்க மாட்டேன்" என்று சொன்னதும் இல்லாது மாமனாரிடம் கண்டிப்புடன் சொல்லியும் விட்டான்.

"பாரிஸ் சென்றதும் நான் எல்லாம் பக்குவமாக அவர்களிடம் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் அவர்களைப் பற்றி கவலை இல்லாது கல்யாண வேலைகளை கவனிக்குமாறு"

நந்தனா மிகவும் பிஸியாகிப் போனாள். அவள் ஆப்ரேஷன், புது ஹாஸ்ப்பிட்டல் கட்டும் பணி மேற்பார்வை, கல்யாண ஒழுங்கு என்று அவள் இருக்க. பார்த்த சீதாலட்சுமிக்கு கடுப்பு, கடுப்பாக வந்து கொண்டிருந்தது.

யாரும் பெரிதாக பேசாது போனாலும் அவரவர் கடமையை செய்து கொண்டிருந்தனர்.

மிகவும் களைத்து போய் நந்தனா மாடி ஏற,
"எல்லோரும் அவங்க, அவங்க சந்தோஷத்தை மட்டுமே பார்த்துகிட்டு போனா குடும்பம் விளங்கின மாதிரி தான்" என்றார் பழங்களை வெட்டியவாறு.

மாடியில் ஏறிக்கொண்டிருந்தவள் காதில் விழுந்தது. நிச்சயதார்த்தமானதிலிருந்து அவர் தனது கல்யாண விஷயத்தில் ஒதுங்கி இருப்பதையும், அப்பப்போ ஏதோ ஜாடை, மாடையாக சொல்வதையும் கவனிக்கத் தவறவில்லை.

"வைரம் எங்கேயோ இருக்க, வெறும் கல்லை தூக்கி வைச்சுக்கிட்டு வைரம், வைரம்ன்னு எவனோ ஒரு மடையன் குதிச்சனாம்" இன்றும் அவர் ஏதோ சொல்ல அவளுக்கு புரியவில்லை. பேசாது ஏறினாள்.

"சும்மாவா சொன்னாங்க கழுதைக்கு எப்படி தெரியும் கற்பூரவாசனை?" என அவர் குரல் வர அவள் மேலே இருந்து,

"அலோ சீதாலட்சுமி மேடம்! என்ன பழமொழி, பேச்சு எல்லாம் ஒரு மார்க்கமாக இருக்கு? டைரக்ட்டாகவே பேசலாமே!" என கிண்டல் தொனியில் கேட்டாள்.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Dove le storie prendono vita. Scoprilo ora