'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -11

391 9 0
                                    

11

டைனிங் டேபிளில் சந்திரமோகன் அருகே அமர்ந்த ஆர்வின்,

"மாமா உருவத்துக்கும், கேரக்டருக்கும் கூகிள் லிங்கு தேடினாலும் கிடைக்காது போல" தாடையை தடவியவாறு அவன் கேட்க,

"இப்போ புரிஞ்சுக்கிட்டியா? அவ நெருப்பு! பார்த்து மெதுவா ஹேண்டில் பண்ணு" என்றார்.

"அவ ஃபயர்ன்னா மீ ஆல்ப்ஸ் மவுண்டன் ஸ்னோ மாமா..என்னாகும் சொல்லுங்க பார்க்கலாம்" என கன்னத்தில் கை வைத்து குறும்புடன் கேட்க,

"என்ன பனி விழுந்து நெருப்பு அணைஞ்சுடும்ன்னு சொல்றியா?"

"நோ! ராங் ஆன்சர்..! ஸ்னோ பயரை கிஸ் பண்ணிக்கும்! பயர் சில்லுன்னு ஸ்னோ கூட சேர்ந்துக்கும்" 'என்றான் அவன் கண்கள் சிமிட்டி,

"சுத்தம் நீ பேசுறத கேட்க நல்லா இருக்கு! ..எரிமலை குழம்புக்குள்ளே ஸ்னோ புஷ் ன்னு ஆகிட கூடாதுடா" அவர் கிண்டலடித்தார்.

சிந்துஜா ஹாலுக்கு வந்தவள் ஆர்வின் அப்பொழுதுதான் அவள் பார்வையில் விழுந்தான்.

"ஹேய் யார்ரா இந்த ஹேண்ட்ஸம் மேன்?" தனக்குள் கேட்டவள்,

"என்ன உட்கார்ந்திருக்கிறதே நின்னுகிட்டு இருப்பது போல இருக்கே...?" அவனை பார்வையால் பாயிண்ட்ஸுகளை பெருக்கியவாறு அமர்ந்தாள்.

"ஆர்வ் ! இது என்னோட தம்பி பொண்ணு சிந்துஜா" என அவளை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சந்திரமோகன்.

அவளும் பதிலுக்கு "ஹாய்" சொல்லியவாறு சந்திரமோகன் காதில் "எங்கேயோ பார்த்தது போல இருக்கு பெரியப்பா! நீங்க சொன்ன பாரிஸ் ஸ்பெஷல் இதுதானா?" எனக் கேட்டாள். "யப்பா செம்மையா இருக்கிறானே" என மனதுக்குள் நினைக்க,

"அட ஆமா நீ நினைவு வைச்சு இருக்கியா? என்னோட மாப்பிளை" என்றார் அவர் ஆச்சர்யத்துடன்.

"உங்க பாரிஸ் ப்ரண்ட் சன் தான்னு ஒரு கெஸ். ஆளு என்னைப்பார்த்து அசராத தெனாவெட்டுடன் இருக்கும் போதே நினைச்சேன். நீங்க யாரையும் லேசில் வீட்டுக்கு அழைச்சு வரமாட்டீங்களே" சொன்னவள் இடை நிறுத்தி, அவனை பார்த்தவாறு பெரியப்பாவிடம் திரும்பி,

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Onde histórias criam vida. Descubra agora