'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -4

546 9 2
                                    

4

இந்தியா சென்னை

அந்த ட்ரெய்னிங் ஹாஸ்ப்பிட்டல் எங்கு காணினும் வெள்ளை கோட்டும் ஸ்டெதஸ்கோப்புமாக காட்சியளித்தது.

பல்லாயிரம் மருத்துவர்களை செதுக்கி உலகுக்கு தருவதில் முதலிடம் வகிக்கும் பிரைவேட் ட்ரெயினிங் ஹாஸ்ப்பிட்டல். அதிலிருந்து வெளியேறும் இளவயது மருத்துவர்கள் எல்லோரும் இந்தியாவின் மூலை முடுக்கு எங்கினும் சர்வீஸ் செய்கிறார்கள் என்றால் அதுதான் இல்லை.

ஒவ்வொருத்தரும் அமெரிக்க கண்டம், ஐரோப்பா கண்டம், ஆஸ்திரேலியா கண்டம் என செட்டிலாக ஓடி இருப்பார்கள்.

பிறந்த நாட்டின் நிலமை அப்படியா ? இல்லை பாரின் கரன்சி மகிமையோ ? விடை தேடவேண்டாம். விட்டுவிடுவோம்.

அந்த ஹாஸ்ப்பிட்டல் ட்ரெயினிங் மருத்துவர்களுக்கே என்று பிரத்தியோக உயர்தர உணவகம் அங்கே போகலாம் வாங்க.

உணவகத்தில்,

மொபைலில் இருந்த டிஸ்பிளே படத்தை ரொம்ப நேரமாக பார்த்தபடி தன்னை மறந்திருந்தான் விமல்.

'ஏன்டா அதான் நித்தமும் ஒரு செகண்டு கூட விடாது ஒட்டிக்கிட்டு இருக்கியே பத்தலியா ? இந்த பார்வை பார்த்துகிட்டு இருக்கே? ' எதிரே பெப்ஸியை உறிஞ்சியவாறு விமலின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவனான விஷ்ணு கேட்டான்.

''அதானே...தூங்குற நேரம் போக, தும்முற நேரம் வரை அவ கூடவே இருக்கான். பார்த்து, பார்த்து பூத்திருந்தேன்னு ஓல்ட் டூயட் பாடிகிட்டு ..'' கிண்டலடித்தான் அடுத்த நண்பன் பிரேம்.

'டேய் சும்மா இருங்கடா.. ! நந்தனா எனக்காக பிறந்தவள்டா.. ! எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு தீராது...' என பார்வையை மொபைலில் இருந்து விலத்திய விமல் தொடர்ந்தான்.

'ஏன்டா எங்கேடா இன்னும் ஆளை காணோம் ... ? நோட்ஸ் வாங்கிட்டு வரேன்னு போனா...'' என திரும்பி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நந்தனா வருகிறாளா ? எனப் பார்த்தான்.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now