'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -56

355 8 0
                                    

56

அதே நேரம் விமல் அவனது வீட்டில் அடிபட்ட புலி போல உறுமிக்கொண்டு இருந்தான். அவமானம் ஒருபுறம், நந்தனாவின் பதில் மறுபுறமாக அவன் கொதித்துக்கொண்டிருந்தான்.

"என்ன திமிருடா அவளுக்கு? நான் இறங்கிப் போக அவ தலைக்கு மேல ஏறிக்கிட்டு. ஒரு பொம்பளைக்கு என்ன திமிருடா? விடக்கூடாதுடா! நான் காத்து இருந்து காய் நகர்த்த இவ எனக்கு..எனக்கு.." டாமிட் ஓங்கி குத்தினான்.

"விமல் விடுடா! நந்தனாவை பிரண்டாக பாரு! உன் பிரண்டுடா! அவ உன் மேல அன்பும் அக்கறையும் வைச்சு இருந்தவள்டா.. அவ குணம் தெரிந்தும் தப்பு பண்ணது நீ!" பிரேம் சொல்ல,

"என்னடா பெரிய தப்பு? குடிப்பது என்ன தப்பா? இது எல்லாம் பேஷன்.. குடிக்காதவனை சொசைட்டி மதிப்பது இல்லை.. அதிலும் என்னைப் போன்ற மேல்தட்டு வர்க்கத்தில் பிறந்தவன் குடிக்காமல் இருந்தால் அவனுக்கு கோளாறு" என்றான் ஒரு விளக்கம் கொடுத்து.

"விமல்! அதான் ஏற்கனவே எல்லாம் முடிஞ்சு போச்சே.. அவ கழுத்துல தாலி ஏறிடுத்து.. அப்புறம் எதுக்கு அந்தக்கழுதையை பத்தி பேசிகிட்டு இருக்கே ?" சுகன்யா கோபமாக கேட்டாள்.

"அம்மா! இது என்னோட பிரெஸ்டிஜ் மேட்டர்.. நீங்க தலையிடாதீங்க! எனக்கு அவ வேணும்! என் காலடியில் அவ இருக்கணும்! அவ என்ன யார்னு நினைச்சா? அவ சொல்லுக்கு நான் ஆடிக்கிட்டு இருந்தது கல்யாணம் ஒன்று நடக்கும் வரைக்கும் தான்! அவளை எனக்கு அடிமையாக்கணும்...அவ அழகு, அவ உடம்பு, அவ மொத்தமும் எனக்கு தான்! அவ கழுத்துல தாலி கட்டி என் பொண்டாட்டியாக்கி, எனக்கு அடிமையா வைக்கல நான் விமல் இல்ல"

"டேய் என்ன உளறிக்கிட்டு இருக்கே! நீ என்னமோ சாதாரணப் பொம்பளைன்னு நினச்சுப் பேசுறே.. நந்தனாடா.. அவளைப் போல ஒரு பெண் பார்த்து இருக்கியா? புத்திசாலித்தனம், தைரியம், ஒழுக்கம், அழகு நிறைஞ்ச பொண்ணுடா..இந்த வார்த்தை அவ மட்டும் கேட்டா போடா நாயேன்னு சொல்லுவா" விஷ்ணு சொல்ல,

"அவளை என் காலடியில் விழ வைக்க என்கிட்டே வழி இருக்குடா" என விகாரமாக சிரித்தான்.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now