'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -36

385 10 1
                                    

36

'உள்ளே நுழைந்த நந்தனாவோ யாரும் யார்கூடவும் பேசாது உறை நிலையில் இருப்பதை கண்டாள்.

"என்னப்பா பொண்ணுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்கு.. உங்க யார் முகத்திலேயும் துளி கூட சந்தோஷத்தை காணலை.. என்னாச்சு?" அவள் தந்தை அருகே வந்து தோளைத் தொட்டாள்.  அவரோ இறுகி போய்ப் இருந்தவர்,

"எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து இன்னும் சாகாம இருக்கேனே" என்று அவர் வார்த்தைகளை விட, நந்தனா அதிர்வுடன் பார்க்க, ஆர்வின் அதுக்கு மேல் அதிர்ந்தவன்,

"மாமா!" என அதட்டியவன் அவரது தோளில் கை போட்டு,

"வாட் எ வேர்ட் யூஸ் பண்றீங்க?" எனக் கோபமாக கேட்டான். அவன் அப்படி உரிமையாக அதட்டியதையும் பேசியதையும், பார்த்து சினம் கொண்டவள்,

"ஏய்! நானும், அப்பாவும் பேசிக்கிட்டு இருக்கோம்ல.. நீ யாரு மேன் எங்களுக்கு இடையில்?" என அவன் மேல் பாய்ந்தாள்.  அவன் முகம் மாற பின்னுக்கு எட்டு வைத்தவன்,

"சாரி டாக்டர்! உங்களுக்கும், உங்க அப்பாவுக்கும் இடையில் நான் வரல.. பட்  என் மாமா வாயில் நெகட்டிவ் வேர்ட் வந்தால் மீ இடையில் வரும்" என்றுவிட்டு சுவற்றில் சாய்ந்து கொண்டவன், மாமனாரைப் பார்த்து கண்களால் கலங்க கூடாது என்றான். 

நீலாவுக்கும் மகள் மீது கோபம் வரத்தான் செய்தது.  நந்தனா விடாது தந்தையிடம்,

"என்னப்பா பிராப்ளம்? விமலை பிடிக்கலையா? இல்லை என்னோட அணுகுமுறை பிடிக்கலையா?" என அவரை நேரிடையாக கேட்டாள். அவர் மவுனமாக இருக்க,

"நாங்க மாப்பிளை பார்க்க மாட்டோமுன்னு நீயா தேடிக்கிட்டு வந்துட்டே.. அப்பா பார்த்து வைச்ச மாப்பிளையை பத்தி தெரியுமா உனக்கு?" நரேந்திரன் கோபமாகக் கேட்டான்.

"ஓ ! அதான் விஷயமா? சாரிண்ணா.. அப்பா பார்க்கலாம்.. அம்மா பார்க்கலாம்.. நீங்க பார்க்கலாம்.. ஆனா வாழப்போறவ நான்..நான் பார்க்க கூடாதா? இல்லை என்னோட செலக்ஷன் தப்பா?"அவள் கைகளை குறுக்கே கட்டியவாறு தீர்க்கமான குரலில் கேட்டாள்.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now