'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -45

403 11 2
                                    

45

தாலி கட்டியதும் எழுந்து ஓடப் பார்த்தவனை,
"எங்கே ஓடப் பார்க்கிறே? வா இப்படி" என அவன் கையை பிடித்து, நந்தனாவின் கரங்களுடன் இணைத்து அக்கினி வலம் வர வைத்தார்கள். முதல் முறையாக தொட்டு தன்னவளின் கரம் பற்றி சுற்றியவனுக்கு,

"ஆஹா நனு மாட்டிக்கிட்டா! திஸ் ஆர்வின் வின்" என குதூகலித்தான். அம்மி மிதித்து, மெட்டி மாட்ட, அவள் பாதம் தொட்டவன்,

"அய்யயோ இங்கேயே குனிஞ்சு கிஸ் அடிச்சுடுவேன் போலிருக்கே" என முணுமுணுத்தவாறு அவளது வெண்பிஞ்சு பாதங்களுக்கு மெட்டி மாட்டினான்.
சிந்துஜா அவனுக்கு மட்டும் கட்டை விரல் தூக்கிக் காட்ட, அவனும் புருவம் உயர்த்திக் காட்ட, அவர்கள் எதற்காக அப்படி செய்தார்கள்? என்று அப்பொழுது எவரும் அறிந்திருக்கவில்லை.

"பார்த்து வைச்ச மாப்பிளையை விட இப்போ தாலி கட்டியவன் தான் உனக்கு பொருத்தமா இருக்கான்" என்று வந்த சொந்தங்கள் வேறு வாழ்த்திவிட்டுப் போக, சந்திரமோகன் குடும்பத்துக்கு பெருமை பிடிபடவில்லை.

ஆனால் காட்டிக்கொடுக்காது ஆளாளுக்கு கண்கள் ஜாடை செய்தும், சிமிட்டியும், புன்னகைத்தும், புருவம் தூக்கியும், தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டார்கள்.

அக்கினி வலம் வந்து முடிய ஆராத்தி எடுக்கவும் ஆர்வினுக்கு தான் காண்பது கனவு தானா? என சட்டென்று ஒரு சந்தேகம் எட்டிப்பார்க்க, அருகே திரும்பி மனைவியைப் பார்த்தான். அவளது முகம் எந்தவித உணர்ச்சியையும் காட்டாது இறுகிப் போய் இருந்தது. எதிர்பாராத திருப்பங்களால் அவள் அதிர்வுக்குள்ளாகி இருப்பது தெரிந்தது.

"தட் செயினை கட்டிப்போட்டேனே.. அப்போ மேரேஜ் ஆகிடுத்தா?" என வன வாய்விட்டு கேட்டவன், அவள் நிமிர்ந்து முறைத்துப்பார்க்க மயங்கி சரிந்தான்.

நரேந்திரமோகனும், சந்திரமோகனும் கத்தியை எறிந்துவிட்டு அவனை தாங்கிக்கொண்டார்கள்.
நந்தனா சுயநினைவு பெற்றவளாக சுதாரித்து டாக்டருக்கே உரிய குணம் வர, தந்தையின் மடியில் கண் மூடி படுத்து இருந்தவன் கன்னத்தில் தட்டினாள். அவன் விழிக்காது போக, கை பிடித்து, நாடி பார்த்து, பின் தண்ணீர் எடுத்து அவன் முகத்தில் தெளிக்க, மெல்ல கண் விழித்தவன் எதிரே மிக, மிக அருகில் தன்னவளின் மங்களகரமான முகம்.

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now