'என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ...!' -எஸ்.ஜோவிதா -16

321 7 0
                                    

16

ஆர்வின் நந்தனா மனதில் இடம் பிடிப்பது அவ்வளவு சுலபமில்லை எனது தொடர்ந்து வந்த நாட்களில் புரிந்து கொண்டான். தன்னைப் பார்க்கும் போது அவளது கண்களில் ஒருவித சினம் கலந்த எரிச்சல் ஒளிர்வதைக் கண்டு கொண்டான்.

"எங்கே போயிடப் போறே? உனக்கு என் காதலின் மேக்நட் பவர் தெரியலை! எப்படி இழுத்து வந்து என் மார்பில் போட்டு கொஞ்ச வைக்க போகுதுன்னு பாரு பேபி" என மனதுக்குள் சவால் விட்டான்.

"உனது காத்திருப்புக்கு அர்த்தமே இல்லைடா" என மேலே இருந்து அசரீரி சொல்லியது.

சிறியவர்கள் பள்ளிக்கு சென்றுவிடும் போதெல்லாம் அவனும் பொழுது உபயோகமாக கழிய வேண்டும் என்று நினைத்தவனாக, தமிழ் படிக்கும் எண்ணத்துடன், டியூசன் சென்டர் சேர்ந்து கொண்டு ஆர்வமாக படிக்க ஆரம்பித்தான்.

தமிழோ  அரை உயிரில் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்க, இங்கு ஒருவன் அதுவும்  வயது வந்தாலும் வெளிநாட்டில் பிறந்தவன் ஆர்வமாக விரும்பி படிக்க வந்ததை அந்த டியூசன் சென்டர் ஆச்சர்யமாகவே பார்த்தது.

"நீ ஏம்பா டியூசன் சென்டர் போகணும் வீட்டுக்கே மாஸ்டரையோ, டீச்சரையோ, வரவழைச்சு கத்துக்கலாம்" சீதாலட்சுமி சொல்லவும்,

"பாட்டிமா அது குட் பீலிங்ஸ் இருக்காதே! நமக்கும் படிக்கணும்ன்னு மைண்ட் வராது! ஹவுஸ் அண்ட் பிளேஸ் செட் ஆகாதே...சென்டர் போய் படிக்கும் போது காம்படிஷன்  இருக்கும்..நாமும் படிக்க போறோம்ன்னு ஒரு எனெர்ஜி வரும்.. நம்மைப் போல நாலு ஸ்டுடண்ட்ஸ் வருவாங்க.. கூடவே சேர்ந்து படிக்கலாம்.. பழகலாம்.. கல்ச்சரை கத்துக்கொள்ளலாம்..  வெளியில் போவது என்னைப் போன்றவர்களுக்கு என்றும் மனசுக்கும் மைண்டுக்கும் நல்லது.." .என சொல்லி மறுத்து விட்டான்.

பெரிய டியூசன் சென்டரில் தமிழ் படிக்க வந்தோர் சொற்ப அளவே. அதை பார்த்து இவன் வியக்க, தடுமாறும் தமிழுடன் இவன் படிக்க வந்ததையிட்டு அவர்கள் வியக்க, முடிவில் அங்கே வந்தவர்கள். நண்பர்களாகிப் போனார்கள்.

புரியாதவற்றை வீட்டில் சீதாலட்சுமியிடம் கற்றுக்கொள்ளத் தொடங்கினான். அவன் தீவிரமாக தமிழ் படிப்பதையும், அவனது ஆர்வத்தையும் பார்த்து வீட்டில் உள்ளோர் பாராட்டினார்கள். ஆனால் நந்தனாவோ,

"தமிழ்ப்பண்டித சிகாமணி பாட்டம் வாங்கப்போறாராம்.. அதுக்கு மெகா சீரியல் வில்லி சீதாலட்சுமி மேடம் சப்போர்ட்'' என்று கிண்டலடிக்க ஆர்வினும் சளைக்காமல்,

"ஏன் பாட்டி ஹூ இஸ் தட் பண்டித சிகாமணி?? பன்னிக்கு சிசேரியன் பண்ற டாக்டர் என்ன சொல்றாங்க?" என அவன் சீதாலட்சுமியிடம் விளக்கம் கேட்க நந்தனா கோபத்தின் உச்சிக்கு போனவள் ,

"டேய் உன்னை" என கையில் கிடைத்த ஸ்டூலை தூக்கி எறியவும், அவன் கேட்ச் பிடித்து அதன் மேல் அமர்த்தலாக அமர்ந்து,

"பண்டித சிகாமணி, சீரியல் மணி நாங்க ஆகுறோமோ இல்லையோ.. உங்க பேத்தி மாபியா கேங்குக்கு டெரரர் டாக்டராக போறது கன்பார்ம்'' என அவன் சத்தமாக அவளுக்கு கேட்கட்டுமே என்று சொல்ல அவளும்,

"ஆகுறேண்டா முதல் ஆபிரேஷன் உன் மூஞ்சில பிளேடு போடுறது தான் ! பனிக்கரடிக்கு பிளட் என்ன கலர்ன்னு பார்த்துடலாம்'' என்று கறாராக சொல்லிவிட்டுப் போனாள்.

ஆர்வினும் அவளது கோபத்தை தூண்டிவிட்டு அவள் பேசும் அழகையும், கோபத்தையும், ரசிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தவனுக்கு அன்றும் கசக்கவில்லை.

அவள்  ஒதுங்கினாலும் இவனை பார்க்கும் போதெல்லாம் ஏதாச்சும் குறை கூறுவதே வழக்கமா வைத்து இருந்தாள்.  சந்திரமோகனும், நரேந்திரனும் பிசினஸ் விசயமாக பிஸியானாலும், ஆர்வினும், முடிந்தவரை கம்பெனிகள்  சென்று அவர்களை மூச்சு விட வைக்க அவன் மறக்கவில்லை.

ஆறுமாசம் பிசினஸ் மேனாகவோ, பிஸினஸ் மைண்டுடன் இருக்க அவன் விரும்பினான் இல்லை.
அவன் வந்த நோக்கமே காதல் ! காதல் ! நந்தனாவின் மேல் கொண்ட காதல்! அதில் கை தேர்ந்து, அவளை கைப்பிடிக்கும் எண்ணம் ஒன்று மட்டுமே அவன் சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்தது. நந்தனாவை  பார்த்து பார்த்து ரொமான்டிக் லுக்கு விடுவதே நோக்கமாக வந்தவனுக்கு, மாமனாரும், நண்பனும் படும் பாட்டை பார்த்து மனசு கேட்காது அவர்களுக்கு சில நேரங்களில் ஒத்தாசையாக இருந்தான்.
(...)

என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! Where stories live. Discover now