💞40💞

1.9K 55 27
                                    

மாலை நேரம்🌤🌤

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

மாலை நேரம்🌤🌤. மேற்கில் ஆதவன் தன் செந்நிறத்தை பரவச்செய்தபடி, மெல்ல ஒளிந்து கொண்டிருக்கும் அழகை ரசித்தவண்ணம், ஆதி மொட்டை மாடியில் நிற்க, கீழிருந்து வந்த மித்ரனின் வண்டி சத்தம் கேட்டு, முக மலர்ச்சியுடன் திரும்பினாள்.

மித்ரனின் பைக்கை தொடர்ந்து வந்த ப்ரஜனின் காரையும் கண்டு, வேகமாய் கீழிறங்கியவாறே, "வாங்க ப்ரஜன் அண்ணா" என அழைத்தவளை காண, ப்ரஜனிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. ஏதோ, இந்த அளவாவது தன்னுடன் ஆதி இயல்பாய் பேசுகின்றாளே என்று!

"இப்போ பரவாலயா. காயம் சரி ஆகிட்டா"

"அதெல்லாம் எப்போவோ போயே போச்சு" என கூறிவிட்டு, அவனிற்கும் மித்ரனிற்கும் தேநீர் தயாரிக்க சென்றாள்.

மித்ரன் குளிக்க செல்வதற்காக மாடியேற, "ஹைய் ப்ரஜு மாமா..." என ஓடி வந்து, அவனின் இருபுறமும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர், ரித்தியும் கீர்த்தியும்.

எப்போதும் போல, அவர்கள் தனி உலகத்தில் உரையாடி கொண்டிருக்க, கோவிலுக்கு சென்றிருந்த கௌசல்யா உள்ளே நுழைந்தபடி "வா பா ப்ரஜன். நல்லாருக்கியா" என விசாரித்தார்.

"குட் ஆண்ட்டி.. அங்கிள் எப்படி இருக்காங்க" என பொதுவான நல விசாரிப்புகளுக்கு பின், ப்ரஜன் அனைவரிடமும் "வர ஃப்ரைடே, சென்னைல வாங்கின வீட்டுக்கு பால் காய்சுறோம். எல்லாரும் கண்டிப்பா வரணும்" என அழைப்பை விடுத்தான். அனைவரும் மகிழ்ச்சியுடன் வருவதாய் கூற, ரித்தியும் கீர்த்தியும் குதித்தனர். "ஹைய் மாமா இனி இங்கதான் இருக்க போறாங்க" என்று.

🎉 You've finished reading கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் 🎉
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now