❣️27❣️

801 38 0
                                    

காரில் திகைப்பிலிருந்து வெளிவராமல், அமைதியாய் வந்த ஆதியின் கைபற்றி, மெல்ல அந்த ப்ரஹ்மாண்ட மண்டபத்தில் நுழைந்தான் மித்ரன்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

காரில் திகைப்பிலிருந்து வெளிவராமல், அமைதியாய் வந்த ஆதியின் கைபற்றி, மெல்ல அந்த ப்ரஹ்மாண்ட மண்டபத்தில் நுழைந்தான் மித்ரன். 

ஜோடியாய் வந்திறங்கியவர்களை கண்ட அனைவரும், அவர்களின் பொருத்தத்தை பாராட்டாமல் இருக்க  முடியவில்லை. அலுவலகத்திலிருந்து வந்த சிலருக்கு  அதிர்ச்சியாய் இருந்தது.. தேவ்-சார் பையன் மித்ரனா? திடீரென மறைந்த ஆதி எப்படி இங்கே? என பலர் குழம்பி தவித்தனர்.

மண்டபத்திற்குள் நுழைகையில், சிலர் கை தட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர். மெல்ல அனைவருக்கும் தலையசைத்தபடி மேடையை நோக்கி முன்னேறினர்.

மேடையின் அருகில், கீழே அமர்ந்திருப்பவர்கள் யாருக்கும் தெரியாதவாறு, மறைந்தவாக்கில் நின்றிருந்த சிவநேசன் குடும்பத்தை பார்த்ததும், ஆதிக்கு வேர்க்க ஆரம்பித்தது. மித்ரனின் கையை இருக்க பற்றியபடி.. தன் நடுக்கத்தை குறைக்க முயன்றாள்.

அதை புரிந்து கொண்ட மித்ரன், அவள் தோலோடு அணைத்தபடி, "ரிலாக்ஸ் ஆரூ, பயப்படக்கூடாது.. அவங்க நம்ம ஃபேமிலி, உன்னையும் என்னையும் அவங்க எதும் செய்ய மாட்டாங்க" என தைரியமூட்டியபடி  அர்ஜுனிற்கு கண்ணசைத்தான். 

மித்ரனின் கண் அசைவை புரிந்து கொண்ட அர்ஜுன், ஆதியின் நண்பர்களை அழைத்து கொண்டு, அவளருகில் நின்றபடி பேசி ஆதியை திசை திருப்பினர்.

எல்லோரம் இருக்கும் சபையில், தன் பயத்தால், மித்ரன் குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட கூடாது என நினைத்து, சமாளித்துக் கொண்டு நின்றாள்.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now