💞38💞

846 38 0
                                    

கௌசல்யாவும் சாரதாவும் மாற்றி மாற்றி ஆதியுடன் தங்கி, நன்றாய் பார்த்துக்கொண்டனர்

اوووه! هذه الصورة لا تتبع إرشادات المحتوى الخاصة بنا. لمتابعة النشر، يرجى إزالتها أو تحميل صورة أخرى.

கௌசல்யாவும் சாரதாவும் மாற்றி மாற்றி ஆதியுடன் தங்கி, நன்றாய் பார்த்துக்கொண்டனர். விஷயம் கேள்வி பட்ட கமலாவும், மூன்று வேளை உணவுடன் வந்து, சற்று நேரம் ஆதியுடன் பேசிக்கொண்டு, அவளை பார்த்துக்கொண்டார். கதிர் அர்ஜுன் இருவர் குடும்பத்துக்கும், இப்போதைக்கு எதுவும் கூற வேண்டாம் என மித்ரன் கமலாவிடம் கேட்டு கொண்டதால், அவரும் எதுவும் சொல்லவில்லை.

அலுவலகம் பொறுப்பேற்று சிறிது காலம் தான் ஆனதால், மித்ரனால் முழு நேரமும் ஆதியுடன் இருக்க முடியவில்லை. அலுவலகம் செல்ல மாட்டேன் என்று கூறியவனை, கெஞ்சி கூத்தாடி ஆதிதான் அனுப்பி வைத்தாள். மாத்திரையின் விளைவால் உறங்குவதும், விழித்திருக்கும் நேரம் உடன் இருபவரோடு, பேசி பொழுதை போக்குவதுமாய், ஆதி மூன்று நாள் மருத்துவமனையில் இருந்தாள்.

மூன்றாம் நாள் மாலை, ஆதியின் காயங்களை பரிசோதித்தபின், மருத்துவர் அவளை வீட்டிற்கு செல்லலாம் என்று அனுப்பி வைத்தார். மித்ரனிற்கு தான் அதில் மிகுந்த மகிழ்ச்சி😃😃. மருத்துவமனையில் ஆதியுடன் யாராவது இருந்து கொண்டே இருப்பதால், அவனால் அவளுடன் தனியாக, நேரம் செலவிட முடியாமல் தவித்தான். இனி அந்த தொல்லை இருக்காது அல்லவா!

வீட்டிற்கு வந்தவளை ஆலம் எடுத்து உள்ளே அழைத்து வர, அவளை கண்டு ஓடி வந்தனர் ரித்தியும் கீர்த்தியும். “அண்ணி....” என அவளை அணைத்தது கொண்டு கண்ணீர் சிந்தினர். “ஹாஸ்பிடல்ல நிறைய பேர் இருக்க கூடாதுனு, அம்மா எங்களை வீட்டிலே இருக்க சொல்லிட்டாங்க. 😭😭வி மிஸ் யு அண்ணி” என மறுபடியும் அணைத்துக்கொண்டனர். அவர்களின் பாசத்தில் அங்கிருந்தோருக்கும் கண்கள் கலங்கியது.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்حيث تعيش القصص. اكتشف الآن