❣️23❣️-corrected

866 48 1
                                    

"ஹே ஆரு, முழிச்சிட்டியா" என கேட்டபடி தனதறைக்குள் நுழைந்தான் மித்ரன்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

"ஹே ஆரு, முழிச்சிட்டியா" என கேட்டபடி தனதறைக்குள் நுழைந்தான் மித்ரன். ஆதி அமைதியாய் இருப்பதை பார்த்து.. "என்ன ஆச்சுடா, உடம்புக்கு எதும் பண்ணுதா" என அவளருகில் அமர்ந்தபடி கேட்டான்.

மித்ரன் தன்னிடம் அன்பாய் நடந்துகொள்ள மாட்டானா என ஆதி பலமுறை ஏங்கிருக்கிறாள். ஆனால் இப்போ, தன்மேல் பாவம் பார்த்து கிடைக்கும் இந்த அன்பு கசந்தது. அவனை விட்டு தள்ளி அமர்ந்தபடி,  "நாம டிவோர்ஸ் பண்ணிக்கலாம்" என சாதாரணமாய் கூறினாள்.

சுள்ளென கோபம் தலைக்கேற, ஆதியை அடிக்க கை ஓங்கினான். அவளின் பயந்த தோற்றத்தை பார்த்து தன்னையே மனதில் திட்டியபடி, "சாரிலாம் கேட்க முடியாது. ஏன்னா நீ பேசுனது தப்பு. கல்யாணம் ஆகி முழுசா ஒருநாள் ஆகல, அதுக்குள்ள நீ என்ன கேக்குறன்னு புரிஞ்சுதான் கேக்குறியா?" என்றான் காட்டம் குறையாமல்.

திரும்பி நின்று அவன் முகத்தை காணாது, "உங்களுக்கு நான் ஒத்துவர மாட்டேன்" என கூற

அவளை தன் பக்கம் திருப்பி, தோள்களை பற்றிக்கொண்டு, "நீ உளறுறதைலாம் நான் கேட்டுட்டு இருக்க மாட்டேன். நமக்கு கல்யாணம் ஆகிட்டு. புடிக்குதோ புடிக்கலையோ நான் சாவுறவரை, நீதான் என் பொண்டாட்டி.. புரியுதா" என உலுக்கினான்.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now