💞36💞

841 38 0
                                    

காலையில் கண் முழித்த மித்ரன், தன் மடியில் தலை வைத்து, இன்னும் கைகளை விடாமல் தூங்கும் ஆதியின் உறக்கம் கலையாமல் மெல்ல எழ, அவனது சிறு அசைவில் கண் விழித்து, அவனை தன் புறம் இழுத்தாள் ஆதி

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

காலையில் கண் முழித்த மித்ரன், தன் மடியில் தலை வைத்து, இன்னும் கைகளை விடாமல் தூங்கும் ஆதியின் உறக்கம் கலையாமல் மெல்ல எழ, அவனது சிறு அசைவில் கண் விழித்து, அவனை தன் புறம் இழுத்தாள் ஆதி. இதை எதிர் பார்க்காமல் நிலை தடுமாறி, அவள் மேலே விழ,  அவன் உதடு அவள் கன்னத்தில் பதிந்தது. பதறிய ஆதி, அவனை தள்ளி விட்டு, “ச்சீ.. டர்ட்டி பாய். ப்ரஷ் பண்ணாம கிஸ் பண்றஎன்றுவிட்டு, அவனுக்கு தெரியாமல் சிரித்தபடி😜 ஓடி விட்டாள்.

“🙄🙄அவதான் இழுத்தா, இப்போ என்னமோ நான் கிஸ் பண்ணது போல பேசிட்டு போறா. இன்னைக்கு காலைலே ஆரம்பிச்சுட்டா வம்பிழுக்க” என நினைத்தபடி முகம் கழுவி, அவர்களது அறைக்கு பக்கம் இருக்கும், சிறிய ஜிம்மிற்குள் நுழைந்தான். தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்த ஆதியும், அவன் உடற்பயிற்சி செய்யும் அறைக்குள் எட்டி பார்க்க, மித்ரன் அவன் நடிப்பை ஆரம்பித்தான். கடுகடுவென முகத்தை வைத்தபடி, ஒர்கவுட் செய்து கொண்டிருந்தான்.

“ஆஹா. இன்னும் இவனுக்கு கோபம் போகலையே. சரி ஏதாவது செஞ்சு, மித்து கோபத்தை குறைப்போம்” என்று அவனருகில் சென்றாள்.

வேர்க்க விறுவிறுக்க த்ரெட் மில்லில் ஓடி கொண்டபடி, அருகில் உள்ள துண்டை எடுக்க மித்ரன் கை நீட்ட, ஆதி வேகமாய் துண்டை எடுத்து அவனிடம் நீட்டினாள். முறைத்தபடி அதை வாங்காமல், மீண்டும் தன் பயிற்சியை தொடர்ந்தான்.

 "மித்து. சாரிடா. ப்ளீஸ் உன் ஆரூ மேல கோவப்படாத”

எதுவும் பேசாமல் த்ரெட் மில்லை நிறுத்திவிட்டு, புஷ் அப் எடுக்க ஆரம்பித்தான். அவன் அருகில் அமர்ந்தபடி, அவன் முகத்திலிருந்து விழும் வேர்வைத்துளிகளை துண்டால் ஒற்றி எடுத்தபடி, “ஐ வாஸ் ராங். நான் ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டுட்டேன்ல. மன்னிக்குறவன் பெரிய மனுஷன்டா”

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now