💟18💟-corrected

826 40 0
                                    

ஆதி தன்னை யாரும் கண்டு கொள்ளாத இடமாய் யோசித்தாள். "வீட்ட விட்டு வெளில போ லாம்னு முடிவு பண்ணியாச்சு. ஆனா எங்க போறதுன்னு தெரியலையே." சட்டென 'வந்தாரை வாழ வைக்கும் அன்னை' என சொல்லப்படும் சென்னை நியாபகம் வந்தது.

"எஸ். சென்னை தான் கரெக்ட். அங்க அப்பா ப்ரஜன் யாரும் வர மாட்டாங்க. நாம இருக்குறது தெரிய வாய்ப்பே இல்ல." என சென்னை செல்லும் ஃப்ளைட் டிக்கெட் எடுக்க திரும்பியவள், அப்படியே நின்றாள். "நோ நோ. ஃப்ளைட்ல போனா, கண்டு பிடிச்சிருவாங்க" என யோசித்து, கிடைத்த ஆட்டோ, டாக்ஸி, பஸ், ட்ரைன் என மாறி மாறி சென்னை வந்து சேர்ந்தாள்.

நல்ல தரமான ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிக்கொண்டாள். "ஹ்ம்.. ஹப்பா.. சுதந்திரமா வாழ போற ஆதி. ஜாலி." என துள்ளி குதித்தபடி, சிங்கார சென்னையை பற்றி அலசி ஆராய்ந்தாள். சற்று நேரம் அங்குள்ள தொலைக்காட்சியை பார்த்தாள். அப்புறம் போர் அடிக்க ஆரம்பித்தது. "ஃபுல் டே இப்டி சும்மா இருக்க முடியாது. செம போர். ஸோ என் படிப்புக்கு சம்மந்தமே இல்லாத வேலைய தேடணும், அப்புறம் என்னை உயிரா நினைக்குற ஃப்ரெண்ட்ஸ் தேடணும், அப்புறம் சந்தோசமா ஊர சுத்தி எல்லாரோடவும் பழகணும், இங்க இருக்க வரைக்கும் அழுகவே கூடாது" என்று முடிவெடுத்து ஷாப்பிங் சென்றாள்.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now